காரைதீவு சகா-
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் எதிர்வரும்29ஆம் திகதி கடல்தீர்த்தம் கொணர்ந்து திருக்கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 10நாட்கள் சடங்கு இடம்பெற்று ஜூன் மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் நடைபெறவுள்ளதென ஆலய பரிபாலனசபை தலைவர் கலாபூசணம். சி.இராமநாதன்தெரிவித்தார்.
ஆலயத்தின்பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஸ் தலைமையில் கிரியைகள் யாவும்நடைபெறவுள்ளன. தினப்பூஜைகள் பகல் 11மணிக்கும் மாலை 5மணிக்கும் நடைபெறும்.
31ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனி மகாவிஸ்ணு ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி இவ்வாலயத்தை வந்தடையும்.
14ஆம் திகதி எட்டாம்சடங்கு நடைபெறும்.