எம் கிருஸ்ணா-
ஆசிரியர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனமெடுக்க கோரியும்
ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்
கருப்புபட்டியணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தமிழ் வித்தியாலயத்தில்
பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் தாக்கபட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்து 27.05.2019. செவ்வாய்கிழமை காலை குறித்த வித்தியாலயத்தின்
ஆசிரியர்கள் மாணவப் பெற்றோர்கள் கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டனர்
கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு
மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கூட்டத்தில் எட்டப்பட்ட
முடிவுகளுக்கு அமைய பாடசாலையிலுள்ள மேலதிக பாதை ஒன்று
வேலியிட்டு மறைக்கபட்டு ஒருவழி பாதையூடாக மாணவர்கள் பாடசாலைக்குள்
வருவதற்கான ஏற்பாடுகள் பாடசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளபட்டது இந் நிலையில் அனறைய தினம்
பாடசாலை முடிந்து வீடுதிரும்பி கொண்டிருந்த ஆசிரியர்கள் இருவர்மீது
பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கும்பல் ஒன்று
கடுமையாக தாக்கிசென்றமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு
செய்யபட்டமைக்கு அமைய ஜந்து பேர் கைது செய்யபட்டு நீதிமன்றில் முன்னிலை
படுத்தபட்ட போது ஜந்து பேரும் பினையில் விடுவிக்கபட்டதாக மஸ்கெலியா
பொலிஸார் தெரிவித்தனர் நிலையில்
இன்றய தினம் கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்ட பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கையில் மஸ்கெலியா
கவரவில தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் தாக்கபட்ட சம்பவத்தை
பெற்றோர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கினேறோம் எனவே இன்று நாட்டில்
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது ஆகவே இந்த தாக்குதல்
சம்பவத்தை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சும் சம்பந்தபட்ட தரப்பினர்களும்
உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென பெற்றொர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்