மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில்


ட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா வித்தான கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிளலித்த இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஷரியா பல்கலைக்கழகம் குறித்து பேசப்படுகின்றது. இதில் 500 மில்லியன் ரூபா பங்கு கிழக்கு மாகாண ஆளுனரின் புதல்வருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இது எவ்வாறு? இதனை கண்டறிய வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னால் உள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறியப்படும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது சிறந்ததாகும் என்று நான் நினைக்கின்றேன் இதன்போது அமைச்சர் ரவூப் ஹகீம் உயர்கல்வி அமைச்சு பட்டப்படிப்பு கற்கை நெறியை வழங்குவதற்கு எந்தவொரு நிறுவனத்துக்கும் அனுமதியை வழங்குவதற்கு முன்னர் அது தொடர்பில் விதிமுறைகள் உண்டு. இந்த நடைமுறை தொடர்பில் தான் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. இதனை பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லை என்றால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவற்றை தீர்த்து சரியான நடைமுறையை கடைப்பிடிக்கவேண்டும். இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை நான் சமர்பிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
சட்டரீதியில் இதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி குறிப்பிட்டார். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா என்று சபாநாகயர் கரு ஜெயசூரிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டார். அப்போது இராஜாங்க அமைச்சர் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -