எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டு நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் பேரீச்சை மரங்களில் காய்த்து குலுங்கும் பேரீச்சை பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28) இரவு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட சுமார் 70 பேரீச்சை மரங்களில் அதிகமான மரங்கள் இவ் வருடமும் காய்த்து காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடம்பெற்ற பேரீச்சை அறுவடை நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அறுவடை மேற்கொண்டதுடன்
பேரீச்சை கனிகளை பொதுமக்களுக்கு வழங்கி வைத்தனர்.