நாவலபிட்டியில் சாரதிகள் மீதான தாக்குதலையடுத்து மீண்டும் தொடர் பனிபகிஷ்கரிப்புக்கு அட்டன் கண்டி பஸ் சாரதிகள் முஸ்தீபு


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா-
நாவலபிட்டி பொது பஸ்தரிப்பிடத்தில் அட்டன் கண்டி மார்க்க சேவையிலீடுபடும் பஸ் வண்டிகளை நிறுத்தகூடாதென கூறி தனியார் பஸ் மற்றும் இ.போ.ச பஸ் சாரதிகளை நாவலப்பிட்டி பகுதி சாரதிகளினால் (26) தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து மீண்டும் சேவை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட அட்டன் கண்டி மார்க்க தனியார் மற்றும் இ.போ.ச பஸ் சாரதிகள் முஸ்தீபு
கடந்த 23 ம் திகதி அட்டன் கண்டி சேவை பஸ்கள் நாவலபிட்டி பொது பஸ்த்தரிப்பிடத்தில் நிறுத்க்கூடாதென்றும் நாவலப்பிட்டி ரயில் நிலைத்திற்கருகிலே நிறுத்த வேண்டுமென நாவலபிட்டி கம்பளை மற்றும் கினிகத்தேனை மார்க்க பஸ் சாரதிகளும் நாலலப்பிட்டி இ.போ.ச ஊழியர்களும் அச்சுறுத்திய நிலையில் 24 ம் திகதி அட்டன் கண்டி மார்க்க பஸ் சேவை பனிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் இதனால் தொழில், மற்றும் வைத்திய சாலைகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்

இந் நிலையில் நாவலப்பிட்டி பொலிஸாரும் பஸ்தரிப்பிட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாவலபிட்டி பஸ்த்தரிப்பிடத்தில் நிறுத்த அனுமதிக்க இனக்கப்பாடு எட்டப்பட்டு மீண்டும் 25 ம் திகதி முதல் அட்டன் கண்டி பஸ் சேவை வழமைக்கு திரும்பியது
இதனையடுத்து 26 ம் திகதி நாவலப்பிட்டி பஸ்தரிப்பிடத்தில் பயணிகளை இறக்க நிறுத்திய அட்டன் தனியார் பஸ் சாரதி மற்றும் அட்டன் டிப்போ இ.போ.ச பஸ் சாரதியையும் நாவலப்பிட்டி பகுதி சாதிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தாக்குதலையடுத்து மீண்டும் தமது பாதுகாப்பை உறுதிடுத்தும் வரையில் தொடர் பனிபகீஷ்கரிப்பில் ஈடுபட அட்டன் கண்டி மார்க்க பஸ் சாரதிகள் முஸ்திபு காட்டி வருகின்றனர்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -