சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்களுக்கு பகல் போசனம் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான்-
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்களை தமது சொந்த வீடுகளில் மீள்குடியமர்த்தும் நிகழ்வும் அந்த மக்களுக்கு பகல் போசனம் வழங்கும் நிகழ்வும் இன்று(4) நடைபெற்றது.
இதன் போது அக்கிராமத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல் காரணமாக அச்சத்தினால் மக்கள் தமது குடியிருப்புக்களை விட்டு வெளியிடங்களில் வசித்து வந்த மக்கள் அனைவரும் தமது சொந்த வீடுகளில் மீள்குடியமர்த்தும் நோக்குடனும் அந்த மக்களுக்கு பகல் போசனம் வழங்கும் நிகழ்வும் பொலிவேரியன் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சட்டத்தரணி யூ.கே .லத்தீப் கல்முனை பிரதேச செயலாளர் நஸீர் அமைச்சின் மேலதி்க செயலாளர் ஏ.எல்.எம். சலீம் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சாய்ந்தமருது-மாளிகைக்காடு உலமா சபை பிரதிநிதிகள் பிரதேச பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது அச்சம் காரணமாக எதிர்வரும் நோன்பு மாதத்தில் இந்த மக்கள் தமது சொந்த வீடுகளில் இல்லாமல் பல காஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்பதனால் அவர்களின் மனதில் உள்ள தயக்க நிலையை இல்லாது செய்து அவர்களின் சொந்த இடங்களில் அவர்களை நிம்மதியாக வாழ வைக்க நாங்கள் இந்த முயற்சியயை செய்வதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -