பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்னிடம் கேட்டால் சரியான பதிக் சொல்வேன் மு.அமைச்சர் அதாஉல்லா




ஹுதா உமர்-

 என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் இருக்கிறார்கள். புல்வெட்டுவதற்க்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக பதிலளிக்க முடியாது. 
என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும். எப்படி என்றால் பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகன, அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்து,அங்கு தொழுத மக்களை கஷ்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்து கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன். இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும் ? எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். திகன கலவரத்தை பொலிஸ் திணைக்களத்தை கொண்டு நடத்திய கயவர்கள் நீங்கள் என தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

தமிழ் லெட்டர் இணையத்தளம் ஒழுங்கு செய்திருந்த "சமகாலம் தொடர்பில் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களுடன் நமது ஊடகங்கள்" எனும் கருத்துரையும் இப்தார் நிகழ்வும் நேற்று புதன் கிழமை 22.05.2019 மாலை 4.45 மணிக்கு அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசுகையில்:

முட்டாள்கள் போன்று ஹக்கீம் போன்றோர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போகி இருக்கிறார்கள். இன்னும் ஒருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு,கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும், வியாபாரம் செய்வதற்க்குமான அமைச்சு. கடந்த காலத்தில் அவருடைய அமைச்சின் பிரிவு ஒன்றில் போதைவஸ்து கடத்தல் இடம்பெற்றது. அப்போது நான் அவரிடம் இந்த அமைச்சை ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறாய், உன் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகளில் பாரிய பின்னடைவு இருக்கிறது அதனை நிவர்த்தி செய்யும் அமைச்சை ஏன் பெறவில்லை. அதனால் தான் உன்னை கடத்தல்காரன் என அடையாளப்படுத்துகிறார்கள் என்றேன். இப்போது அவரை கூடவே பயங்கரவாதி என்கிறார்கள். நீ பயங்கரவாதியா ? இல்லையா என்பதை இறைவன் அறிவான். அத்தனை குண்டுதாரிகளும் உன்னுள்ளையே இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போன்று பயங்கரவாதியாக நீ இருந்துவிட கூடாது உன்னை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒழிந்துகொள்ள முஸ்லிம் சமூகத்தை பயன்படுத்த வேண்டாம்

பாராளுமன்றத்தில் றிஸாத்தின் வால்கள் கூறுகின்றார்கள் முஸ்லிம் சமுகத்துக்கு குரல்கொடுப்பதால் தான் இவ்வளவு சிக்கல் என்கிறார்கள்.அதற்க்கு சிங்கள எம்.பி சொல்கிறார் கபீர் காசிம் போன்ற இன்னும் எத்தனையோ முஸ்லிம் எம்பிக்கள் இருக்கிறார்கள் அவர்களை நாங்கள் சொல்கிறோமா இல்லையே என்கிறார். பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டியதாக சொல்வது போன்றே இருக்கிறது இவர்களின் கதை. ஹிரு விவாத நிகழ்ச்சியில் நீங்களே உங்களை காட்டிக்கொடுத்துவிட்டு பின்னர் ஒப்பாரி வைக்கிறீர்கள்.

அமைச்சுப்பதவிக்கு பின்னால் கட்டுப்பட்டுக்கொண்டு முஸ்லிங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். முஸ்லிங்களாகிய நாங்கள் சொல்ல வேண்டும் இந்த அமைச்சு பதவியை தூக்கி வீசு என்று. இந்த அமைச்சினால் இப்ராஹிம் ஹாஜிக்கு பித்தளை கொடுத்த கதையும் வருகிறது. நாட்டுக்கும் அதேபோல முஸ்லிங்கள் யாருக்கும் இந்த அமைச்சினால் நன்மையில்லை. சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சந்தேகத்துடன் நோக்குகிறார்கள் என்றால் உடனடியாக இராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும். அஸ்ரபிற்க்கு பின்னர் இவர்தான் மற்றைய அஸ்ரப் ஆக சில முகப்புத்தக குஞ்சிகளின் பிரச்சாரம் வேறு. போலி சமூக வலைத்தள பிரச்சாரங்களும்,உடைந்த பள்ளியில் ஒரே நாளில் மூன்று அஸர் தொழுததுமே மிச்சம்.

ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு செய்த அநியாயங்கள் அவர்களுக்கே இப்போது திரும்பி வந்துள்ளது. ஊடகவியலாளர்களும்,அரசியல்வாதிகளும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இன்னும் மூன்று அல்லது நாலு மாதங்கள் மட்டுமே உள்ள அரசாங்கத்துக்கு மிகப்பெரிய வில்டப்.உன்னை சுற்றியே எல்லாம் நடக்கிறது. அவற்றையெல்லாம் விளங்கப்படுத்த வேண்டிய இடத்தில் விளங்கப்படுத்த வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீனை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் கடுமையாக சாடிப்பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்

குமாரி குரே விடயத்தில் ஜம்மியத்துல் உலமா தலைவர் கொடுத்த பத்துவாவை எல்லோரும் அறிவர். அவர்கள் நல்ல ஜோடி, சந்தர்ப்பத்தில் அவர்களை இவரும் இவரை அவர்களும் காப்பாத்திக்கொள்வது. இந்த சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை உங்களுக்கு தெரியாது. அரசியலும் இஸ்லாமும் பணத்துக்கு விற்கப்பட்டது. மக்களும் காசுக்கு அடிபணிந்து சமூகத்தை வேறுதிசைக்கு கொண்டுசென்றுவிட்டனர். நாடு பிளவுபட்டு விட்டது. எங்கு என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் ஒற்றுமை இல்லாது போனதால் நாட்டை காப்பாற்ற ஒரு ஜனாதிபதி தேர்தல் வேண்டும். என தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -