நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மனங்களை இணைக்கின்ற 'ரண் மாவத்' வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் கல்முனை நகர மண்டப வீதியினை காபர்ட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு இன்று (24) வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பைறூஸ் தலைமையில் நடைபெற்றது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் எம்.பீ. அலியார், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ. சத்தார், சட்டத்தரணி றோசன் அக்தர், எம்.எஸ்.எம். நிசார், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.