கல்முனையைச் சேர்ந்த பிரபல அதிபரும் தர்மாச்சாரியாருமான நடராசா நாகராசா நேற்று(21)இரவு காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 73.
ஆங்கிலஆசிரியராக கல்விப்புலத்தில் சேர்ந்த அவர் முதலாந்தர அதிபராக பலகாலம் சீரிய சேவையாற்றியருந்தார். பல பொதுநலஅமைப்புகளில் பணியாற்றியருந்தார். கல்முனை இ.கி.மிசன் மகா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற அதிபரான இவர் வெளிவாரி கலைப்பட்டப்படிப்பில ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இந்துநாகரீகம் பாடத்தை கற்பித்த சிறந்த வளவாளராவார்.
இருவாரங்களுக்கு முன் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இவர் படுகாயமுற்று மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மரணமானார்.அவர் மனைவியையும் 5பிள்ளைகளையும் விட்டுப்பிரிந்துள்ளார்.
அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை(23) வியாழக்கிழமை மாலை 4மணியளவில் கல்முனை பொது மயானத்தில் நடைபெறும்.