தைக்கா நகர் மக்களுக்கு ஒரு வாசிகசாலை இல்லாத அவல நிலை- ஊர் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு

பைஷல் இஸ்மாயில்-  

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட தைக்கா நகர் பிரதேசத்தில் வாசிகசாலை ஒன்று இல்லையென இப்பகுதி வாசகர்களும், மாணவர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் நீண்ட தூரத்திற்கு அப்பாலுள்ள அட்டாளைச்சேனை அல்லது பக்கத்து ஊரான அக்கரைப்பற்று பொதுநூலகத்துக்கு செல்லவேண்டிய பாரிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பத்திரிகை, சஞ்சிகை நூல்களை வாசிப்பதிலும், வேலை வாய்ப்புக்களுக்கான அறிவித்தல் அடங்கிய வர்த்தமானிகளை அறிவதிலும், நூல்களை இரவல் பெறுவதிலும் தாம் பெரிதும் சிரமப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண முன்பள்ளி பாலர் பாடசாலையின் தவிசாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர்களின் கவனம் எங்களின் பக்கமும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும் எங்களது பிரதேசத்தில் வாசிகசாலை இல்லை என்ற நீண்ட நாள் குறைபாட்டை இவர்கள் நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை இனியாவது முன்னெடுப்பார்களா? என்ற கேள்வியையும் இப்பிரதே மக்கள் கேட்கின்றனர்.

இது தொடர்பாக, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தெரிவிக்கையில்,

தைக்கா நகர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.அஜ்மலினால் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் வாசிகசாலை அமைப்பது தொடர்பில் ஒரு பிரேரணை சமர்ப்பித்ததாகவும் அதன் பிரகாரம் தைக்கா நகர் பிரதேசத்தில் ஒரு வாசிகசாலை அமைத்துத் தருவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதற்கான முடிவும் எட்டப்பட்டதாகவும் கூறினார்.

அந்த முடிவின் பிரகாரம், ஒரு வாசிகசாலை அமைப்பதாக இருந்தால் ஒரு பொதுவான நிரந்தக் கட்டிடம் ஒன்று தேவை எனவும் அவ்வாறு ஒரு கட்டிடம் இருந்தால் அதனை சபைக்கு தெரியப்படுத்துவதுடன், அந்த கட்டிட அமைப்பு தொடர்பான நிறுவனத் தலைவரின் அனுமதியினையுடன் ஒரு சிபார்சுக் கடிதத்தைப் பெற்று அக்கடித்தை சபையில் சமர்ப்பித்தன் பின்னர் குறித்த பிரதேசத்தில் வாசிகசாலைக்கான பத்திரிகைகளையும், நூல்களையும் வழங்க முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.

அதற்கமைவாக, இதுவரை காலமும் அப்படியான ஒரு கட்டிடம் தைக்காநகர் பிரதேசத்தில் இருப்பதாக இதுவரை காலமும் குறித்த பிரதேச சபை உறுப்பினரால் காண்பிக்கப்படவும் இல்லை. அப்படி காண்பித்தால் வாசிகசாலைக்கு தேவையான பத்திரிகைகளையும், நூல்களையும் உடனடியாக வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -