சிரேஷ்ட தொழிற்சங்கவாதி சிங். பொன்னையா மறைவு; வெள்ளைக் கொடிகளை பறக்கவிடுவோம்.


எஸ். பிலிப், பொதுச்செயலாளர் - தொழிலாளர் தேசிய சங்கம் 
லையகத்தில் தொழிற்சங்க துறையில் நீண்டகாலமாக பணியாற்றி தொழிற்சங்கங்க துறையில் தனக்கென தனிப்பெயரைக் கொண்டிருந்தவர் சிரேஷ்ட தொழிற்சங்கவாதி சிங். பொன்னையா. கடந்த பத்தாண்டு காலமாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகராக சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர். அனுபவங்கள் நிறைந்த அவரது மறைவு தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு பேரிழப்பாகும். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சங்கத்தின் கொடியை அரைக்கம்பத்திலும்,வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட தொழிற்சங்கங்க ஆலோசகர் சிங். பொன்னையா வின் மறைவினை ஒட்டி அவர் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் தொழிற்சங்கங்க துறையில் நீண்ட காலமாக பணியாற்றியவர் சிங். பொன்னையா. கடந்த ஐம்பது ஆண்டுகளில் அவரது பெயரை அறியாத தோட்ட முகாமையாளர்களோ, நிர்வாகிகளோ இருக்க முடியாது. தொழிற்சங்க - தோட்ட நிர்வாக பேச்சுவார்த்தைகளில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிகள் கொண்ட அவர் அதில் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்ந்தார். தொழிற்சங்கங்க துறையில் மாத்தரமின்றி அரசியல் துறையிலும் கால்பதித்து மூன்று தடவைகள் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அன்னாரது பிரிவால் துயருறும் அன்னாரது குடும்பத்தாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவப்பதோடு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தோட்டங்கள் தோறும் வெள்ளைக் கொடிகளை பறக்கவிடுமாறும் அவரது இறுதி கிரியைகள் நடைபெறும் இடம் அறவிகரகப்பட்டதன் பின்னர்
சங்க உறுப்பினர்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -