சமாதானத்த்துக்கும் சகவாழ்வுக்கும் விழுமியங்களை நிலைநிறுத்த நாம் உறுதி கொள்வோம்- பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு

அஸ்ரப் ஏ சமத்-
2019ஆம் ஆண்டு சித்திரை மாதம் 21 ஆம் திகதி உயிா்த்த ஞயிறன்று நீர்கொழும்பு , கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்கள் ம ீதும் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கினறோம். தமது அன்பிக்குரியவா்களை நண்பா்களை, சகபாடிகளை இழந்து துயருறும் அனைவருக்கும் நாம் எமது ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த தீவிலே சமாதானத்த்துக்கும் சகவாழ்வுக்கும் விழுமியங்களை நிலைநிறுத்த நாம் உறுதி கொள்வோம். என பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு தெரிவித்தாா்.

இலங்கை மன்றக் கல்லுாாியில் நேற்று 23 சமாதானம், அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள் எனும் தலைப்பில் பேராசிரியை சித்திரிலேகா , பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு நெறியாளா் குமுதினி சாமுவேல் ,அருட்சகோதரி நொபேல் கிறிஸ்டின், சட்டத்தரணி ஏமிசா டேகல், மற்றும் சிரேஸ்ட ஊடகவியாளா்கள் ,சட்டத்தரணி தில்ருக்சி கந்துன்நத்தி ஆகியோறும் இங்கு கருத்துத் தெரிவித்தனா்.
பாதிப்புக்குள்ளானவா்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அனைவருக்கும் மற்றும் சமாதானத்தையும் சகவாழ்வையும் நோக்கி அழைக்கின்றதுடன் , பழிவாங்கள் இடம் பெறாமல் தடுப்பதற்காகப் பணியாற்றும் சமுகத்தினா் அனைவருக்கும் நாம் பெரிதும் நன்றியுடையவராகிறோம். எவ்வாறெனினும் சில பிரதேசங்களில் முஸ்லிம் சமுக அங்கத்தவா்கள் மீது இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்ற பழிவாங்கள் சம்பவங்கள் குறித்து நாம் கரிசனையனைஅடைந்தள்ளதுடன் இந்நாட்டில் பல்லினம் ,பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வு என்பதை நோக்கிய நமது அர்ப்பணிபிற்காக விடமுயற்சியுடன் செயற்பட இலங்கையா் அனைவரும் அழைக்கின்றோம். சமய அல்லது அரசியல் கையாளுகைகளால் இது அழிந்து போக நாம் விடக்கூடாது.
தம் தெரிவான எந்தவொரு சமயத்தையும் பின்பற்றவும், அனுஸ்டிக்கவும் வழிபாட்டுக்கான தலங்களில் அமைதியான முறையில் வாழிபடவும் ஒவ்வொரு இலங்கையருக்குமான உரிமையினை நாம் உறுதிபடுத்துவோம். நாம் அணைவருமே சமய மற்றும் கலச்சார உரிமைகளைக் கொண்டவர்கள் என்பதுடன் அது ஒருவரது நம்பிக்கையும் விழுமியங்களையும் தனித்தும் பொதுவிலும் அமைதியான முறையில் வெளிப்படுத்துவதற்கான உரிமையினையும் கொண்டது. என்பதனை நாம் உறுதிபடுத்துகின்றோம்.
இலங்கையில் வலி மிகுந்த வன்முறையையும் மோதலும் கொண்ட வரலாறு 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கொடூர யுத்தத்தினையும் இரண்டு கிளா்ச்சிகளையும் கொண்டதாக எமது பற்பல உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது. கடந்த பதது வருடங்களில் 2009இல் ஆயுத மோதலினை இராணுவமும் முடிவுக்குக் கொண்டு வந்ததிலிருந்து அனைத்து இன ,மத அடையாளங்களையும் கொண்ட பல சமூக மட்டத்திலான குழுக்களும் கூட்டமைப்புக்களும் தமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் கட்டி எழுப்பவும் யுத்தினால் தோற்றுவிக்கப்பட்ட ஆழமான காயங்களிலிருந்து மிண்டுவரவும் மிகவும் கடுமையாக உழைத்து வந்துள்ளன. அதுவொரு இலகுவான பாதையாக இருக்கவில்லை என்பதனால் பலா் நம்பிக்கையினை மீளவும் கட்டியெழுப்பி வாகைப்பொறுப்பு மற்றும் நீதிக்கான பாதையில் முன்னோக்கி செல்ல முயற்சித்து வருகின்றனா்.
உயிா்த்த ஞயிறு அன்று இடம்பெற்ற வன்முறையானது அனைத்து சமூகங்களையும் சோ்ந்த பிரசைகளாக அமைதியான சகவாழ்வு மற்றும் சமத்துவத்தை நோக்கிய பாதையினை தேடும் எமது அனைத்து முயற்சிகளிலும் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தக் கூடியதாகும். கடந்த காலங்களில் சமயத்தின் பெயரில் இடம்பெற்ற அடாவடித்தனங்களை கையாள்வதில் அரச தரப்பும் அரச சாா்பற்ற தரப்பினரும் நடவடிக்கைகள் எடுக்காதிருந்தமையும் சிலவேளைகளில் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டமையையும் நாம் மிக வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து எச்சரிக்கைகளையும் அசட்டை செய்து சமுக நலணை புறந்தள்ளி உயிா்த் ஞாயிறில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு இட்டுச் சென்ற பாரிய அலட்சியத்தினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். மீண்டும் நாம் இன்னுமொறு மோதலுக்கோ யுத்திற்கோ வழிவகுக்காது தேசிய ஒற்றுமையாக வாழ்வோம். நாம் அணைவரும் வன்முறைகளைத் தவிா்த்து மீள ஒன்றினைந்து செயற்படுவோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -