நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்த்தியான் தேவலாயத்தில் கடந்த உயிா்த்த தினத்தன்று தற்கொலை பயங்கரவாதியினால் மனித படுகொலைகளும் தேவலாயமும் சேதமடைந்தன. வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சா் சஜித் பிரேமதாச இத் தேவலாயத்தில் தற்பொழுது நடைபெறும் மீள் புனா் நிர்மாணப் பணிகளை பாா்வையிடுவதற்காக நேற்று (6) அங்கு விஜயம் செய்தாா்.
இத் தேவலாயத்தினை இலங்கை ரானுவமும் , மற்றும் அரச பொறியியற் கூட்டுத்தாபணம் .இணைந்து புனா் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. புனித செபஸ்த்தியன் தேவலாயத்தின் அருட் தந்தையாருடன் அங்குள்ள குறைபாடுகளையும் அமைச்சா் கேட்டறிந்து அதனை உடன் நிவா்த்தி செய்வதற்கும் தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தாா்.