இந்த அரசாங்கம் இந்துக்களைப் புறக்கணிக்கின்றதா?

இதுவரை இந்துஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது ஏன்?
இன்றுகாரைதீவில் ஊடகவியலாளர் மாநாட்டில் ஆலயஅறங்காவலர்கள் பிரஸ்தாபம்.
காரைதீவு நிருபர் சகா-

யிர்த்தஞாயிறு அனர்த்தம் இடம்பெற்று இத்தனைநாட்களாகியும் காரைதீவு இந்து ஆலயங்களுக்கு இதுவரை ஒரு பொலிஸ்பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.இந்த அரசாங்கம் திட்டமிட்டு இந்துக்களைப் புறக்கணிக்கின்றதா?
இவ்வாறுஇன்று (3) வெள்ளிக்கிழமை காரைதீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஆலய அறங்காவலர்கள் கேள்வி எழுப்பினர்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் மாநாடு பிரதேசசபையின் நூலககேட்போர் கூடத்தில் இன்று(3) நடைபெற்றது.
ஆலய அறங்காவலர்களான இ.தங்கராசா(பாலையடிவாலவிக்னேஸ்வரர் ஆலயம்) வே.சற்குணநாதன் (ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்) சி.நந்தேஸ்வரன்(ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயம்) சி.இராமநாதன்( பத்ரகாளிஅம்பாள் ஆலயம்) எஸ்.சிவகுமார்(மாவடி கந்தசுவாமி ஆலயம்) செ.புவனேந்திரன்(ஆதிசிவன் ஆலயம்) வி.மயில்வாகனம் (காரையடிப்பிள்ளையாhர் ஆலயம்) வே.சுந்தரலிங்கம்(வீரபத்திரசுவாமி ஆலயம்) கே.தம்பிராசா( அரசடிப்பிள்ளையார் ஆலயம்) எஸ்.கிறிஸ்தோபர்(தேவாலயம்) வி.சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கியமாக தமது ஆலயங்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசாங்கம் வழங்கமுன்வரவேண்டும் என்ற மகஜரை சபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் அறங்காவலர்கள் ஒப்படைத்தனர்.
அவர்கள் கூறுகையில்:
நீண்டகாலத்திற்குப்பிறகு இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் மக்கள் பயபீதியுடனுள்ளனர். குறிப்பாக 3 முஸ்லிம் ஊர்களுக்கு மத்தியிலுள்ள காரைதீவுக்கிராமமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.கடந்த 1985 1990களில் இனக்கலவரத்தால் மிகமோசமாக வெகுவாகப்பாதிக்கப்பட்டது எமது கிராமம். தற்சமயம் மக்கள் ஆலயங்களுக்குவர அஞ்சுகிறார்கள்.
ஆலயங்களுக்கும் கிராமத்திற்கும் பாதுகாப்புவழங்குமாறு பொலிசாரிடம் கேட்டும் இன்னும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஏனிந்த பாரபட்சம்?

காரைதீவு தென்கொடி வடகோடி எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படவேண்டும். பள்ளிவாசலுக்கு தேவாலயத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இந்து ஆலயத்திற்க மறுக்கப்படுகிறது. இது அநீதி.

எதிர்வரும் 13ஆம் திகதி தொடக்கம் 21ஆம் தகிதிவரை கண்ணகை அம்மன ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கு நடைபெறவுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். எனவே அரசாங்கம் பாதுகாப்புவழங்கவேண்டும். என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.

அறங்காவலர்களது மகஜர்களைப் பெற்றுக்கொண்ட தவிசாளர் ஜெயசிறில் அவற்றை உரிய இடத்திற்கு சமர்ப்பித்து தீர்வுபெற்றுத்தருவதாகக்கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -