க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் இறுதித் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை கடந்த 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்தாலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நன்மை கருதி, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பப்படிவங்கள் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சைக்கு தோற்றும் அரச ஊழியர்களின் விண்ணப்படிவங்களை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரம் உரிய பிரதேச கிராம சேவர்களுக்கு மேலதிகமாக நிறுவன தலைமை அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -