மத்திய மாகாணத்தில் எந்தவொரு அசம்பாவதிங்களும் இடம்பெறாமல் பாதுகாப்பட்டது என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவிப்பு

க.கிஷாந்தன்-
நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதால் மத்திய மாகாணத்தில் எந்தவொரு அசம்பாவதிங்களும் இடம்பெறாமல் பாதுகாப்பட்டது என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் வீடுகள் வசதிகள் இன்றி வறுமையில் வாழும் மக்களை இணங்கண்டு வீடமைப்பு உதவிக்கான பிரதான வேலைத்திட்டம் எனும் ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாநகர சபை கூட்ட மண்டபத்தில் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தலைமையில் 09.05.2019 அன்று இடம்பெற்றது.
இதன்போது கூரை தகடுகள், சீமெந்துகள் என்பவற்றை பெறுவதந்கான காசோலைகளும் மேலும் வீடமைப்புகளுக்கான கடன் உதவிக்கான பத்திரங்கள் என 80 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பை உறுதிப்படுத்திய நாட்டின் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆளுநர் என்ற வகையில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாது.

அத்தோடு அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்கு கல்வி நடவடிக்கைகாக அனுப்பி வைக்க வேண்டும்.
அத்தோடு மாணவர்களுக்கு பெரியளவிலான புத்தக பைகளை கொடுக்காமல் புத்தங்களை கையில் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்தால் பாதுகாப்பு பிரச்சினையில் சிரமம் ஏற்படாது என்றார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -