கிழக்கு மாகாண ஆளுணர் கௌரவ. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலகம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது மக்கள் பணிமனை மற்றும் சிவில் அமைப்புகளின் அனுசரனையுடன் 1000 இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் காலை 11.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது தீவிரவாதிகள் தங்கியிருந்த நிலையில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையின்போது தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்ட இடமான சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதில் சாய்ந்தமருது மக்கள் அரசிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி அவர்கள் தமது நன்றிகளை தெரிவிற்கும் பொருட்டு சாய்ந்தமருது மண்ணுக்கு நேரடியாக விஜயம் செய்வதாக பேசப்படுகின்றது.