சொல்லடி வாங்கும் காய்க்கும் மரங்கள்..


ஷிபான் BM. 
மருதமுனை-
காய்க்கும் மரங்களுக்குத்தான் கல்லடியும் பொல்லடியும் என்பது பழமொழி. பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரபிற்குப் பின்னரான இருபது வருட முஸ்லிம் அரசியல் இடைவெளியில், நமது முஸ்லிம் சமூகம் காய்க்கும் மரங்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பெரும்பான்மை சமூகமும் சகோதர தமிழ் சமூகமும் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளது என்பது
நமது தாய் நாட்டின் நடப்புக்களின் ஊடாக அறியக்கூடியவகையில் உள்ளது.

முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுவது போல, நடந்த தீவிரவாத சம்பவங்களோடு தொடர்பே இல்லாத போதும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இரு சமூகங்களின் தலைவர்கள் எனச்சொல்லக்கூடிய அரசியல் பிரமுகர்கள் எடுத்துவரும் பிரயத்தனங்கள் வார்த்தையில் வடித்து மாழாதது. இவர்களின் இந்தப்போக்குக்கு ஒத்தூத ஊடகப்பயங்கரவாதம் கூடவே துணை நிற்கின்றது.
சில விஷம ஊடகங்கள் அண்மைக்காலமாக அதிகம் உச்சரித்தவைகளாக, உயிர்த்தஞாயிறு எனும் சொல்லுக்கு அடுத்ததாக அமைச்சர் றிசாட் பதியுதீன், ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் என்பதனைத் தவிர வேறொன்றும் இல்லை.

யாரோ முஸ்லிம் பெயர்தாங்கிய ஒருவன் செய்த படுபாதகச் செயலுக்காக எதிர் எதிர் முனைகளில் இருந்தும் நல்லாட்சியின் பெயரால் ஒன்றித்து அரசியல் செய்யும் இரு முஸ்லிம் தலைவர்கள் மீது இல்லாத பொல்லாத விடையங்களையும், இந்தத் தருணத்தில் பேசுவதற்கு தகுதியற்ற பேச்சுக்களையும் கட்டவிழ்த்துவிட்டு அவர்களை சிக்கலில் சிக்கவைக்கின்ற முயற்சி முன்னெடுத்து விடப்படிருக்கின்றது.
அளுத்கமை, பேருவளை முஸ்லிம் கலவரத்தின் பிற்பாடு இலங்கையின் ஆட்சிமாற்றத்தின் பிரதான பங்காளியாக செயற்பட்டது மாத்திரமன்றி 52 நாள் அடாத்தாக ஆட்சிபிடித்த போராட்டத்தினை வெற்றிகொண்ட கதாநாயகனாக, இலங்கையில் பணநாயகம் தவிர்த்து ஜனநாயகத்துக்காக உயிர்கொடுத்த உத்தமர் அமைச்சர் றிசாட் பதியுதீன் பெரும்பான்மை சமூகத்தவரால் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களுக்கு இசைந்து கொடுக்காததன் விளைவே இன்று அவர்களின் நச்சரிப்புக்கு பிரதான காரணமாக மாறியுள்ளது.

வடக்கிலே தொண்டர் ஆசிரியர் தெரிவுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், கிழக்கிலே பட்டதாரி ஆசிரியர் நியமனம், ஏ.எல். ஆசிரியர் உதவியாளர் நியமனம், தொண்டர் ஆசிரியர் நியமனம் என அரசியல்வாதிகளின் மூளையில் உதிக்காத விடையங்களைக்கூட மூன்று இனங்களுக்குமாக செயற்படுத்த திட்டம் வகுத்தர் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ். இவற்றை உங்கள் கோர இனவெறிப்பசிக்கு காவுகொள்ளக் கொடுத்து தடுத்துவிட்டால் தொழில் எதிர்பார்த்துக்காத்திருக்கும் இளைஞர் யுவதிகளின் சாபங்கள் உங்களை சும்மா விட்டுவிடப்போவதுமில்லை.
கிழக்கின் விளக்காக ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றுக்கொண்டது முதல் இன்றுவரை அதிகளவிலான இயக்கமற்ற வெள்ளிக்கிழமைகளை கர்த்தால் போட்டு கொண்டாடி நீங்கள் கண்ட பலன்கள் எதுவும் இல்லை.
எவ்வளவுதான் ஓங்கி அவர்கள் வார்த்தைகளினால் அடித்தபோதும் தளராது முகங்கொடுத்து நிற்கும் மனோவலிமையையும் தைரியமும் தலைவர்களுக்கெனவே வாய்க்கவல்லன. அந்த வகையில் மறைந்த தலைவருக்கு பிற்பட்ட முஸ்லிம் அரசியல் இடைவெளியை மீட்டுச்செல்ல இரு தலைவர்களை, எமது சமூகம் அடையாளம் கண்டுகொள்வதில் இருந்த சிக்கல் நிலையினை மாற்றுச் சமூகங்களும் ஊடகங்களும் சேர்ந்து தீர்த்துவைத்துள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -