கிண்ணியாவில் அங்காடி வியாபாரங்களுத் தடை



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட நகர சபை வீதியில் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படும் அங்காடி வியாபாரங்களுக்கு இம் முறை தடை விதிக்க கிண்ணியா நகர சபையில் ஏகமானதாக பிரேரனை நிறைவேற்றப்பட்டது
கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்கள் இன்று (21) நகர சபையின் சபை அமர்வின் போது இப் பிரேரனையை முன்வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கடந்த 21 ம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களினால் நாட்டு நிலைமை தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அசாதாரண சூழ் நிலை ஏற்பட்டுள்ளது .

எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்பு நலன் கருதி இம் முறை நகர சபையின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படும் அங்காடி வியாபாரங்கள், கிண்ணியா கடற்கரை பூங்காவில் அங்காடி வியாபார நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு சபையில் கோரிக்கையினை முன்வைத்தார்.
குறித்த பிரேரனை கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் அவர்களின் தலைமையிலான சக உறுப்பினர்களின் விருப்பத்துடன் அங்காடி வியாபாரங்களுக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்களின் பெருநாட்களை முன்னிட்டும் குறித்த பெருநாளன்றும் கிண்ணியா நகர சபை வீதி, கிண்ணியா கடற்கரை சிறுவர் பூங்கா போன்றவற்றில் இடம் பெறும் அங்காடி வியாபாரங்கள் இம் முறை நடை பெறமாட்டாது ஆனாலும் கடைகள் ஊடான வியாபாரங்களுக்கு எவ்வித தடைகளும் இல்லை எனவும் மேலும் தனது பிரேரனை ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -