சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் -5 ல் கல்வி கற்கும் மு. ஆதில் ஹசன் என்னும் 10வயதுடைய மாணவன் அப்பாடசாலையில் நடாத்தப்படும் புலமைப்பரிசில் மேலதிக வகுப்பிற்காக செல்லும் போது இன்று (29.05.2019) காலை 8.30 மணியளவில் ஐந்து பேர் கொண்ட இனந்தெரியாத நபர்களைக் கொண்ட குழுவினரால் டொல்பின் ரக வேனில் கடத்திச் செல்லப்பட்டு காரைதீவு வழியாக கொண்டு செல்லப்படும் போது தாங்கள் இராணுவத்திடம் சிக்கக்கூடிய அபாயம் இருப்பதனால் மேற்படி மாணவனை மாளிகைக்காடு எல்லையில் உள்ள கடற்கரையோரத்தில் தனியாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் அந்த மாணவருடன் கொண்டு செல்லப்பட்ட துவிச்சக்கர வண்டியையும் புத்தகப் பையையும் சாய்ந்தமருதில் உள்ள பெண்கள் சந்தைக்கு அருகாமையில் விட்டுச் சென்றுள்ளனர் . இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்பும் பெற்றோர்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது..
மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவன் கடத்தல்!