பத்ர் வெற்றியும் ரிஷாத் பதியுத்தீனும்(கவிதை)


-றனூஸ் முகம்மத் இஸ்மாயில்-
உன் கண்ணீருக்குள் களவு தேட 
நான் கல்நெஞ்சக்காரனல்ல
நீயும் நானும் சோனகத்து முஸ்லீம்

சிங்களத்தின் பேரால் கட்சி மறக்க
அவர்களுக்கு முடியும் என்றால்
சோனகத்து குடிமகன் 
எனக்கு மட்டும் ஹராமா

ரமளானின் இரவொன்றில்
இறை மீது ஆணையிட்ட மறுகணமே
இனியென்ன.... நீ சொல்வது சத்தியமே....

அல்லாஹ்வின் அடிமை நான் விதிவிலக்கோ

அல்லாஹ்வே போதுமானவன் என்றதற்காய்
இதே போல் ஒரு தினம் ரமலானில் 
புரவியேறிய பேராயுதப் பெரும்படை ஆயிரத்தை 
புழுதியில் நின்று புரட்டிவிட்ட 
பத்ரு ஸஹாபாக்களின் பறக்கத்தால்...

நீ வெற்றி பெறுவாய்..!
இன்ஸா அல்லாஹ்..!


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -