முபாறக் அப்துல் மஜீத் -உலமா கட்சி
அண்மைய தற்கொலை குண்டு வெடிப்புக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் காரணம் அல்ல என உறுதிப்படுத்தப்பட்ட பின்பும் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழி வாங்குவது நியாயமா என உலமா கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
பயங்கரவாதி ஸஹ்ரானின் பின்னணியில் உள்ளோரையும் ஐ எஸ்ஸுடன் தொடர்புள்ளோர் என்ற சந்தேகத்தில் உள்ளவர்களையும் முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தும், தற்கொலை செய்துகொண்டோரின் மய்யத்துக்களை எமது மைய வாடிகளில் அடக்கம் செய்யவும் மாட்டோம் என அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா கூறியும் குருணாகல், நீர்கொழும்பு, கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் தாக்கியமை மிகப்பெரிய அநியாயமாகும்.
அத்துடன் நிற்காமல் அரபிக்கல்லூரிகளை அரசுடமை ஆக்குதல்,
அரபு மொழியில் தனியார் பெயர் பலகை வைக்க தடைச்சட்டம்,
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை தடை செய்தல்
என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற கொஞ்ச உரிமையையும் பறிக்கப்போவதாக பிரதமரும் அவர் கட்சியினரும் சொல்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களையும் அதற்கு காரணமாக அமைந்த திகன, கண்டி கலவரங்கள் போன்றவற்றையும் இல்லாதொழிப்பதற்கு முயற்சி செய்யாமல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டு
குண்டு வெடிப்புக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவாக தெரிந்தும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் பிரதமர் ரணில் தண்டிப்பது முறையா? நியாயமா? என உலமா கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.