பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு காவலாளிகளை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா-
லையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நிரந்தர காலாளிகளை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சங்கர் மணிவன்னன் தெரிவித்தார்

தற்போது பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு வகையிலும் பாடசாலை நிர்வாகம், பெற்றோர்களும் நடவடிக்கையை முன்னெடுத்து வரும் இந் நிலையில் பாசாலைகளுக்கு நிரந்தர காவலாளிகளை நியமிக்க மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்காது சில அதிபர்கள் மாணவர்களிடத்தில் பாதுகாப்பு விடயங்களுக்கு பணம் வசூழிப்பதாக குற்றம் சுமத்துவதில் நோட்டன் முனைப்பு காட்டுகின்றனர்

நாட்டில் தற்போதுள்ள நிலையில் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை அனைத்து பாடசாலைகளுக்கும் உண்டு, ஆனாலும் 99% பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு காவலாளிகள் இல்லை. இது தொட‌ர்பாக எவரும் கண்டு கொள்வதாக இல்லை ஆனால் பெற்றோர்களிடம் பணம் அறவிட்டு காவலாளிகளை நியமிக்க அதிபர்கள் முயற்சி செய்வதை மட்டும் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு காவலாளிகளை நியமிக்க மலையக தலைமைகள் முன் வர வேண்டும்.
இது தொட‌ர்பாக கல்வி அமைச்சருக்கு விரிவான கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர் . சங்கர் மணிவன்னன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -