தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு அஞ்சலி நிகழ்வாக பிரதேச வாரியாக இடம்பெற்ற நிலையில் லெதண்டி, டங்கள் தோட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர்
உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் குண்டுத்தாக்குலினால் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தினால் தலவாக்க லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக்கூட்டம் இரத்து செய்யப்பட்டு பிரதேசவாரியாக அஞ்சலி நிகழ்வுகளை நடத்துமாறு சங்கத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார் அதற்கிணங்க தலவாக்கலை கொட்டகலை, பொகவந்தலாவ மஸ்கெலியா,அட்டன் உட்பட மலையகத்தில் பல பகுதிகளிலும் ஆலயங்களில் விசேட பூஜைகளும், மெழுகுவர்த்திகள், விளக்குகள் ஏற்றியும் அஞ்சலிகய செலுத்தப்படது .
இந் நிலையில் சமர்வில் வட்டாரம் லெதண்டி , டங்கல் தோட்டங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய உறுப்பினர் ராமச்சந்திரன் ,
உழைப்பாளர்களின் உரிமைக்காக போராடி உயிர் நீர்த்தவர்களின் நினைவாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் மேதினமாகிய இன்றைய நாள் இவ்வவருடம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
தொழிலாளர் உரிமைக்காக உறுதி பூனும் இன்றைய நாளில் நாட்டின் பாதுகாப்பிற்கும் ஐக்கியத்திற்கும் மத,மொழி, பிரதேச பேதமின்றி இலங்கையராய் அனைரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.