முஸ்லிம் சமூகம் மீது அவதூறு பரப்புவதையிட்டு நிலையான சமாதானமிக்க ஆட்சியை உருவாக்க முன்வாருங்கள்


பாராளுமன்றில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்
ஹஸ்பர் ஏ ஹலீம்-
ங்களுடைய மதத்தை பற்றி எங்களின் சமூகத்தை பற்றியும் எமது சமூகம் ஏற்றுக்கொண்ட எங்கள் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பற்றியும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் ஆளுநர்கள் இருவர் பற்றியும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த உயர்சபையில் இனவாத கண்கொண்டும் அதேபோல் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து பேசுவது நிறுத்தப்படவேண்டும் இவ்வாறு பேசுவதன் மூலம் இந்த நாட்டில் இனஐக்கியத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க் கிழமை (07) இடம் பெற்ற பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் நாட்டில் இடம் பெற்ற பயங்கரவாத கொடூர தாக்குதல்களையடுத்து நாட்டு மக்களுடைய இயல்பு நிலை வழமைக்கு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதோடு சகவாழ்வு நல்லிணக்கத்தை ஏற்படுத்த கிறிஸ்தவ மதத்தின் அதியுயர் சபையின் மதகுரு பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை, உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி போன்றோய்கள் இணைந்து நாட்டின் ஜனாதிபதி பிரதமர் முப்படையினர் இணைந்து வருகின்ற வகையில் சிலர் பாராளுமன்றத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்குகின்றார்கள் இவ்வாறாக இருந்தால் எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயற்பட முடியாது நாம் அனைவரும் நிலையான ஆட்சியை உருவாக்க பாடுபட வேண்டும் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களும் இணைந்து நாட்டு நலனுக்காக செயற்பட வேண்டும் மாறாக ஒட்டு மொத்த சமூகத்தையும் 22 இலட்சம் முஸ்லீம்களையும் பிறித்தரிய வேண்டாம் .

பயங்கரவாத தாக்குதல்கள் இடம் பெறவுள்ளதை பத்து நாட்களில் ஒழித்தவர்கள் முஸ்லிம்களையே சாரும் என ஜனாதிபதியின் உரையிலிருந்து புரிய முடிகிறது பயங்கரவாதத்தை இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை முஸ்லிம்களின் கலாசார விடயங்களை பற்றி சிலர் தவறாக வழிநடாத்தி தேவையற்றதை பழிசுமத்துகிறார்கள் எனவே தான் அவதூறுகள் பரப்புவதையும் முஸ்லிம் சமூகம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் நிறுத்தி விட்டு நிலையான சமாதானம் நிலையான ஆட்சியை நிலை நிறுத்த நாம் அனைவரும் ஒன்று படுவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -