நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மனங்களை இணைக்கின்ற 'ரண் மாவத்' வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் கல்முனை ஹனீபா வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு இன்று (25) சனிக்கிழமை மாலை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் தலைமையில் நடைபெற்றது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி றோசன் அக்தர், ஏ.எம். பைறூஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தகர் எம்.எஸ்.எம். பழீல், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், கல்முனை அல் மஸ்ஜிதுர் ரஹ்மானி பள்ளிவாசல் தலைவர் மௌலவி எஸ். ஜூனைதீன், கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத் தலைவர் எம். ஜமால்தீன் உள்ளிட்ட பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.