அட்டன் நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் அட்டன் டிக்கோயா நகர சபையினால் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூழத்தில் இருந்து இராணுவ சீருடைகள் 07.05.2019 அன்று காலை 9 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அட்டன் டிக்கோயா நகர சபை கழிவு அகற்றும் பகுதி ஊழியர்களினால் அட்டன் பிரதான பஸ் தரிப்பிட அருகில் இந்த இராணுவ சீருடைகள் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பை கூழத்தில் கிடப்பதாக அட்டன் பொலிஸாருக்கு குறித்த ஊழியர்கள் கொடுத்த தகவலையடுத்து, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இராணுவ சீருடைகளான தொப்பி மற்றும் காற்சட்டை என்பனவற்றை அட்டன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஆடையகங்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒப்பான துணிகள், உடைகள் இருப்பின் அவற்றை அகற்றிவிடும் படியும் பொலிஸாருக்கு ஒப்படைக்கும்படியும் பாதுகாப்பு தரப்பினரால் வலியுறுத்தப்பட்ட நிலையில் 07.05.2019 அன்று காலை குறித்த குப்பை கூழத்திலிருந்து இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளமை வியப்புக்குரிய விடயமாக உள்ளது.
இதனால் அப்குப்பை கூழ பகுதியை மேலதிக சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.