ஷரியா பல்கலைக்கழகம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை



கிழக்கு மாகாணத்தில் புனானியில் அமைக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்புபீடம்(Batticoa Campus) என்று அடையாளப்படுத்தப்படும் அமைப்பு தொடர்பாக வெளியான பல செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கை பின்வருமாறு:

2019.06.05

ஊடகஅறிக்கை
பல்கலைக்கழகமானியங்களய் ஆணைக்குழு
கிழக்குமாகாணத்தில் புனானியில் அமைக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்புபீடம் (Batticoa Campus) என்று அடையாளப்படுத்தப்படும் அமைப்பு தொடர்பாக வெளியான பல செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
1978ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டம் (அடிக்கடி திருத்தம்) அமைவாகபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விடையதானத்துக்குஉட்பட்டமை 15 அரசபல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் கல்வி திட்டமிடுதல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அந்தபல்கலைக் கழகங்களில் நிர்வாகங்களைமுறைப்படுத்தலுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதே மாத்திரம் ஆகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பீடம் (BatticoaCampus) என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படும் எந்தவொரு நிறுவனமும் பட்டப்படிப்பு கற்கைநெறியை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதியை கோறவில்லை என்றும் இதற்காக எந்தவொரு அதிகாரமும் இவ்வாறான அமைப்புக்கு வழங்கவில்லை என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவலியுறுத்த விரும்புகிறது.

பேராசிரியர் மொகான் டி சில்வா
தலைவர் பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழு


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -