சபையில் விபரீதம் வேறு மாதிரி விஸ்வரூபம் எடுக்க வேண்டிய நிலை வரும் -காரைதீவு தவிசாளருக்கு எச்சரிக்கை !


ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறிலின் ஊடக அறிக்கைக்கு பதில் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.முஹம்மட் பஸ்மீர் தனது அறிக்கையில், கௌரவ தவிசாளர் ஒட்டுமொத்த முஸ்லிங்களையும் நிந்திக்கும் வகையில் அறிக்கையிட்டது தவறு. முஸ்லிங்களே வெறுக்கும் ஒரு சிறிய குழு செய்த தவறால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தவறாக கூறுவதும் , இவ்வாறு விமர்சனம் செய்வதும் தவறான செயலாகும்.என குறிப்பிட்டுள்ளார் மேலும்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வளர்வதற்கு துணை போனவர்கள் யார்? 30 வருடங்கள் இலங்கை நாட்டு மக்களாகிய நாங்கள் பட்ட துன்பம் துயரங்கள் என்னிலடங்காதது அன்று தமிழ் சகோதரர்களை ஒட்டு மொத்தமாக முஸ்லிங்களாகிய நாங்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு போதும் எந்த இடத்திலும் பொட்டைகள் போன்று கருத்துக்கள் தெரிவிக்கவில்லை என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.
அண்மைக்காலங்களில் சில தமிழ் தரப்பு ஆளும் பிரதேச சபைகளில் முஸ்லீம் வர்த்தகர்கள் தமது எல்லைகளில் வியாபாரம் செய்யக்கூடாது என பிரேரணை நிறைவேற்றியும் உள்ளார்கள். நாட்டை குட்டிசுவராக்கிய விடுதலை புலிகளின் வண்மக் காலங்களில் கூட தமிழ் வியாபாரிகள் முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தகம் செய்ய சகல ஒத்துழைப்புக்களை முஸ்லிம் மக்கள் வழங்கினார்கள் என்பதை அந்த இனவாத அரசியல்வாதிகளுக்கு நிணைவு படுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளுக்கோ, தீவிரவாதிகளுக்கோ எப்போதும் ஆதரவு வழங்கவுமில்லை,நிதியுதவியோ,அடைக்கலமோ வழங்க வில்லை என்பதை கௌரவ தவிசாளர் புரிந்து கொண்டு பேச வேண்டும்.முந்தானைக்கு பின்னால் ஒழிந்து கொண்டு வீர, சூற வசனம் பேசுபவர்கள் நாங்கள் அல்ல. இந்த தாயகத்தின் மீது அதீத பற்று கொண்டவர்கள்.என்பதை கெளரவ தவிசாளர் ஜெயசிரீல் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசின் சட்டத்தை மதித்து எமது பெண்கள் முகமூடுவதை தவிர்த்தும் பொது இடங்களில் வக்கிரபுத்தி கொண்ட சில அரசியல் கூஜாக்கள் ஸ்டிக்கர் ஓட்டும் படலத்தை மேற்கொண்டு அரசியல் செய்ததின் தாற்பரியத்தை தமிழ் உறவுகளும் அறியாமல் இல்லைஉங்களுக்கு எங்களோடு வாழ்வது அச்சமாக இருந்தால் தனித்து செயற்படுங்கள் அது உங்களது தனிப்பட்ட சுதந்திரம் அதற்காக இவ்வாறான கோழைத்தனமான அறிக்கை விடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.என கேட்டுக்கொள்கிறேன் இல்லை என்றால் சபையில் விபரீதம் வேறு மாதிரி விஸ்வரூபம் எடுக்க வேண்டிய நிலை வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ரிதிதென்னையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் மூவின மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகமாகும் சட்ட விரோதமாக கட்டப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் சந்தேகம் என்றால் வாருங்கள் தெளிவுபடுத்த கெளரவ ஆளுனர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லா சேர் தயாராக உள்ளார்கள் நாங்களும் உங்களுடன் வர தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஓரிருவர் மீது கொண்ட தனிப்பட்ட ரீதியான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் சில அரசியல் வங்குரோத்து பிடித்தவர்கள் ஊடகங்களுக்கு விடும் அறிக்கை போன்று நீங்களும் செய்வதனை இட்டு மனவேதனை அடைகின்றோம். இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றால் சாய்ந்தமருதில் ஒழிந்திருந்தவர்களை நாங்கள் ஏன் காட்டிக் கொடுக்க வேண்டும், உங்களது கருத்து படி அவர்களை பாதுகாத்திருக்க வேண்டுமல்லாவா.? அதட்கான தேவை முஸ்லிங்களாகிய எங்களுக்கு இல்லை என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -