- முபாறக் அப்துல் மஜீத் உலமா கட்சித்தலைவர்-
என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது இது பற்றி அக்கட்சி தெரிவித்ததாவது, பெருநாள் சம்பந்தமாக ஜம்மிய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் மைதானத்தில் தொழுவதை தவிர்த்து பள்ளிவாயல்களில் தொழும்படியான அறிக்கை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருத்தமானதாக இல்லை. கொழும்பு, மற்றும் வடக்கு கிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டின் மூலம் நாட்டில் பெரும்பாலும் அமைதியான சூழல் உள்ள நிலையில் ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கை முழு நாட்டுக்குமென சொல்வதன் மூலம் முஸ்லிம்களை மேலும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.இலங்கை முஸ்லிம்கள் 24 மணிநேரமும் பள்ளிவாயல் சென்று தொழலாம் என இராணுவம் கூறியுள்ள நல்ல செய்தியை நாம் பார்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் பெரும்பாலும் நல்ல சூழல் உள்ளதால் திடலில் தொழுவதற்கு பாதுகாப்பு தரப்பும் தடையில்லாத நிலை உள்ளது. காத்தான்குடியில் கூட திடலில் தொழலாம் என காத்தான்குடி நகரசபை அறிவித்திருக்கும் போது நாட்டின் அனைத்து பகுதிகள் பற்றியும் அறியாமல் ஜம்மிய்யத்துல் உலமா அறிக்கை விட்டிருப்பது கவலை தருகிறது. இன்றைய சூழலில் பெருநாளை உலமா சபையின் அறிவிப்பை ஏற்று ஒரேநாளில் கொண்டாடுவதில் எந்த தப்பும் இல்லை. இன்றைய நிலையில் அதை நாம் வரவேற்கிறோம்.
அதனால் திடலில் தொழுவது முஸ்லிம் அல்லாதோரால் பிரச்சினை ஏற்படுத்தப்படும் சூழல் உள்ள பகுதிகளில் மட்டும் திடலில் தொழாமல் பள்ளிவாயலில் தொழும்படியும் பாதுகாப்பான பிரதேசங்களில் திடலில் ஒரே நாளில் தொழும்படி ஜம்மிய்யத்துல் உலமா தனது அறிக்கையை திருத்தி வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.