குண்டுவெடிப்பினை தொடர்ந்து வதிவிட சான்றிதழ்களை பெற மக்கள் பெரும் ஆர்வம்.




ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 21ம் ம் திகதி ஈஸ்ட்டர் தினத்தன்று ஜஸ்.ஐஸ்.தீவிரவாதிகள் மேற்கொண்ட குண்டுவெடிப்பினை தொடர்ந்து மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அதிகமான மலையகஇளைஞர் யுவதிகள் வெளிமாவட்டங்களில் தொழில் செய்துவருகின்றமையினால் தற்போது பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரனமாக தொழிலை இழந்து உள்ளதுடன் வருமானம் ரீதியாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர.; இதேவேளை தொழில் செய்கின்ற இடங்களில் அதிகமானவர்கள் தங்கி தொழில் செய்வதால் தொழில் வழங்கும் அதிகாரிகள் கிராம பிரிவு அதிகாரியிடம் வதிவிட சான்றிதழ் கோரப்படுவதாலும் தற்போது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள அனைத்து கிராமசேவகர் காரியாலயத்திலும் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை 100 இற்கு மேற்பட்டோர் வதிவிடசான்றிதழ்கள் , பிறப்பு சான்றிதழ்கள் ,அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக கிராமசேவகர் அலுவலகங்களில் நிறைந்து வழிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. .

அத்தோடு இப்பகுதியில் கடமையாற்றும் கிராம அதிகாரிகள் நேரம் காலம் பாராமல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவரும் நபர்களுக்கு .இப்பணியை துரிதமாக செய்துவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -