இன மத வேறுபாடின்றி அனைவருக்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும்



சேருவில தொகுதி அமைப்பாளர் சந்தீப் சமரசிங்க
அப்துல்சலாம் யாசீம்-
ன மத வேறுபாடின்றி அனைவருக்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும் என சேருவில தொகுதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்தீப் சமரசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை-மொரவெவ பிரதேச சபைக்குட்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் இன்று (12) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சேருவில தொகுதியிலுள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 300 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அதில் 150 இலட்சம் ரூபாவினை மொரவெவ பிரதேசத்துக்கு மாத்திரம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பிரதேசத்தில் மட்டுமல்லாது சேருவில தொகுதியில் அனைத்து மக்களுக்கும் இன மத வேறுபாடின்றி அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாகவும், குறையாக காணப்படுகின்ற மேலதிக திட்டங்களை உங்களுடைய பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைஸர் ஊடாக கலந்துரையாடல்களை நடாத்தி கிராமத்தின் குறைபாடுகளை தனக்கு வழங்குமாறும் சேருவில தொகுதி அமைப்பாளர் மக்கள் மத்தியில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர் சாலிய ரத்னாயக்க,ரொட்டவெவ பள்ளி வாசல் தலைவர் எம்.அமான், மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -