அட்டன் கண்டி சேவை பஸ் வண்டிகள் சேவை நிருத்தபோராட்டம்

 நவலபிட்டி பஸ் நிலைத்தில் நிறுத்த அனுமதி மறுத்தமைக்கு எதிரான சேவை நிறுத்தபோராட்டத்தால் பயணிகள் பாதிப்பு

நோட்டன் பிரிஜ்நிருபர்) எம் கிருஸ்ணா-
நாவலபிட்டி பஸ்தரிப்பிட்டத்தில் நிறுத்த அனுமதி மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனிலிருந்து கண்டி வரை சேவையிலீடுபடும் அரச மற்றும தனியார் பஸ் வண்டி சேவை நிறுத்தத்தில் ஈடுவருகின்றனர்

24.05.2019 வெள்ளிகிழமை காலை முதல் அட்டன் டிப்போ அரச பஸ் சேவையும் அட்டனிலிருந்து சேவையிலீடுபடும் தனியார் பஸ் வண்டிகளும் இவ்வாறு சேவை நிறுத்ததில் ஈடுட்டுள்ளனர்
அட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள்மற்றும் தனியார் பேருந்துகளுக்கும் நாவலபிட்டி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிருத்துவதற்குஅனுமதி மறுத்துள்ளதுடன் அட்டனில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பேருந்துகைளை புகையிரதநிலையத்திற்கு அருகாமையில் நிருத்துமாறு வழியுருத்தியமைக்கு எதிராகவே இந்த பணிபகிஷ்கரிப்புமுன்னெடுக்கபடுவதாக சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்
அட்டனில் இருந்து கண்டி நோக்கிசெல்லும் பேருந்துகளுக்கு நாவலபிட்டி பிரதான பேருந்து தரிப்பிடத்தில்பேருந்துகைளை நிருத்துவதற்கு அனுமதி வழங்கும் வரை பணிபகிஷ்கரிப்பு தொடரும் என பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்
இதனால் இன்றய தினம் காலைவேலையில் தொழிலுக்கு செல்லும் உத்தியோகத்ததர்கள் பெரிதும்பாதிக்கபட்டுள்ளதோடு அட்டனில் இருந்து நாவலபிட்டி வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்குசெல்வோர்களும் பெரிதும் பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -