பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்




ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

லிரூட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்ளுக்கும் உடனடியாக வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும,; அது வரை அவர்களுக்கு தேவையான தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு தேவையான கூரைத்தகரங்கள் உட்பட ஏனையவை பெற்றுக்கொடுக்க தேவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான காணிகளை பெற்றுக்கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளதால்,தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் பரிசோதனையின் பின் இரண்டு வாரங்களில் வீடு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் திலகராஜ் மயில் வாகனம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 29 இரவு 10..00 மணியளவில் ஒலி ரூட் தோட்டத்தில் 05 இலக்க தொடர் குடியிருப்பு தீ ஏற்பட்டு 24 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் இதில் பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் அத்தோட்டத்தில் உள்ள ஒலிரூட் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளன.அவர்களின் நலன் விசாரிப்பதற்காக சென்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு முன்னாள் மத்திய மகாகாணசபை உறுப்பினர் ராஜாராம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் ஐந்தாம் இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று நேற்று முன் தினம் ( 29) திகதி இரவு 10.00 மணியளவில் திடீரென தீப் பற்றிக்கொண்டதில் அக்குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீயினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத போதிலும் தொழிலாளர்களில் அத்தியவசிய ஆவனங்கள்,தங்க நகைகள்,தளபாடங்கள் உடுதுனிகள்,பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் உட்பட அனைத்தும் முற்றாக தீகிரையாகியுள்ளன.
இந்த தீவிபத்து காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர் நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இவர்கள் ஒலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்தின் போது வீட்டில் கேஸ் ;சிலின்டர்கள் வெடிக்க ஆரம்பித்ததனால் தீயினை கட்டுப்பாட்டுக்கொண்டுவருதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளன.அதனை தொடர்ந்து தலவாக்கலை நகர சபை நுவரெலியா தீயனைக்கும் படை இரனும் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து கடும் பிராயத்தணையின் பின் மூன்று மணித்தியாலங்களுக்கு பின் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தள்ளனர்.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 51 பெண்கள் 49 அடங்குவதாகவும் இதில் பாடசாலை செல்லும் மாணவர்கள் 22 பேரும்,ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் 08 அடங்குவதாக அத்தோட்டத்தில் நலன்புரி அதிகாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினாலும் இடர் முகாமைத்துவ நிலையத்தினாலும் சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.

இத் தீ விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத போதிலும் மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீயினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தீவிபத்துக் காரணமாக பிரதேசத்தின் பல இடங்களுக்கு மின் சாரம் துண்டிக்கப்பட்டன.

இதே வேளை பாதிப்புக்குள்ளானவர்கள் பாடசாலையில் தங்க வைக்கபட்டுள்ள போதிலும் பாடசாலை இன்றும் வழமை போல் இடம்பெறுவதாகவும் கற்றல் கற்பித்தல் செயப்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாணவர்களுக்கு ஒழுங்குகள் செய்து கொடுத்துள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகனை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -