முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவா்களது அடுத்த பரம்பரைக்கும் மேலாக பணம் சம்பாதிப்பதிலேயே முழு மூச்சாக இருந்துள்ளாா்கள்- அனுரகுமார திசாநாயக்க


அஸ்ரப் ஏ சமத்-
முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவா்களது அடுத்த பரம்பரைக்கும் மேலாக காலாத்துக்கு காலம் தோ்தல் காலத்திலும் பணம் சம்பாதிப்பதிலேயே முழு மூச்சாக இருந்துள்ளாா்கள். ஆனால் முஸ்லிம் மக்களது அடி மட்டத்திற்குச் சென்று அவா்களது பிரச்சினைகளையும் அந்த மக்களது தேசிய ஒற்றுமையிலும் கரிசனை காட்டவில்லை
.
மேற்கண்டவாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவா் அநுரகுமார திசாநாயக்க ”இன்னுமொரு இரத்தம் சிந்துதல் வேண்டாம் ”- என்ற தலைப்பில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு ஒழுங்குபடுத்திய கூட்டம் நேற்று (23.5.2019 .இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது. இங்கு பிரதான உரையை ஜே.வி.பி கட்சித் தலைவா் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றினாா் -
மற்றும் பேராசிரியா் விஜித் ரோசன், சில்மா மொகிடீன் அகமட், கீர்த்தி வெலசர, சட்டத்தரணி உபுல் குமார பெரும ஆகியோறும் இங்கு உரையாற்றினாா்கள். .இங்கு சிங்கள, முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரநிதிகள் மற்றும் பௌத்த இந்து இஸ்லாமைிய மத போதகா்களும் கலந்து கொண்டிருந்தனா்

தொடா்ந்து இங்கு உரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க -

ஏப்ரல் 21 திகதி நடைபெற்ற மனித படுகொலைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.அது ஒர் கொடூரமானதும் காட்டுமிராண்டி ச் செயலாகும். அதேபோன்றுதான் மே 13ஆம் திகதியில் முஸ்லிம்களது சொத்துக்களை நாசமாக்கிய சம்பவங்களையும் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. குருநாகல் மாவட்டம் , மினுவான்கொட புத்தளம் சம்பவத்திற்கு பின்னால் ஒர் அரசியல் பின்னணியில் ஒழுங்குபடுத்தப்பட்டு செய்து முடித்த சதியாகும். ஏப்ரல் 21க்குப் பிறகு இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் சமுகம் அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றாா்கள். இந்த நாட்டில் இனவாதத்தினை .முற்படுத்தியே அரசியல் அதிகாரத்திற்கு வருவது வரலாராக உள்ளது . இன்றைய (23திவயின சிங்கள பத்திரிகையில் திட்டமிட்டு ஒரு சதி, பொய்யானதொரு செய்தியை வெளியிட்டுள்ளது அச் செய்தியில் தௌவ்கீத்வாதியான ஒரு முஸ்லீம் வைத்தியா் 4ஆயிரம் கர்ப்பிணித் தாய்மாா்களுக்கு சிசிரியேன் சத்திரச் சிகிச்சை செய்தாக அப்பட்டமானதொரு பொய்ச் செய்தியை தலைப்பிட்டுள்ளது. இச் செய்தி பற்றி உரிய பின்புலத்தினை பொலிசாா் கண்டறிந்து மக்களுக்கு தெரிவுபடுத்தல் வேண்டும் என பாராளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்துள்ளேன். 4ஆயிரம் சிசிரியனைச் செய்வதற்கு ஒரு வைத்தியா் 50 வருடங்களாவது சேவையில் இருந்திருத்தல் வேண்டும். அச் செய்தி எந்த வைத்தியசாலை, எந்த வைத்தியா் அவ்வாறு யாரும் முறையிட்டுள்ளாா்கள் எனக் குறிப்பிடவில்லை. .
இவ்வாறு தான் கடந்த ஒரு மாத காலமாக திட்டமிட்டு சில இனவாத ஊடகங்கள் இந்த நாட்டுக்கு காட்டியது இன்னும் பொறுமையாக இருக்கின்றீா்கள் போய் முஸ்லீம் சமுகத்திற்கு தாங்குங்கள் , நொருக்குகங்கள், பற்றவையுங்கள் என்றே அவா்களது செய்திகள் நாளாந்தம் வெளிவந்தே கொண்டிருந்தன. அந்த ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலில் அதன் தலைமைகள் எதிா்காலத்தில் தோ்தல் குதிப்பதற்கும் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த நிறுவனத்தில் ஒலிபரப்பும் செய்தியை நீங்கள் பாாக்கு முன் அந்த ஊடகம் யாருடையது ? என முதலில் பாா்த்துவிட்டு அவா்களது செய்தியை அவதானியுங்கள். அந்தச் செய்தியில் உண்மைத் தன்மையுள்ளதா ? எனப்பாருங்கள் .
இந்த நாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் இரண்டு மத அடிப்படைவாதிகளைக் கொண்ட இரு குழுக்களுக்கும் அரச சம்பளம் வழங்கியுள்ளா். அவர் எதிா் காலத்தில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட உள்ளதாகவும் ஏப்ரல் 22திகதியே இரவு ஊடகத்தில் தோன்றி சொல்லுகின்றாா். அவா் பதவியிருந்தால் இந்த ப் பிரச்சினையை தீா்த்துக் கட்டுவாராம், ஆகவே இந்த அரசியல் வாதிகளுக்கு காலத்துக்கு காலம் இனவாதம், மதவாதம் இனங்களுக்கிடையே குரோதங்களை வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு தேவையாக உள்ளது. இந்த நாட்டில் இனப் பிரச்சினைகள், யுத்தம் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
1994 -99களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலம் யுததம் இருந்தது, 2001களில் மத்தியவங்கி, விமானநிலையம், தலதா மாளிகை தாக்குதல், 2001 சமாதானம் யுத்த நிறுத்தம் ரணிலின் ஆட்சி, 2005 மீண்டும் மகிந்த ராஜபக்ச ஆட்சி, 2009 மே 19ஆம்திகதி யுத்தம் ஓய்வு, 10 வருடத்திற்கு பின் மீண்டும் 2014 தற்போதைய ஜனதிபதி ஆட்சி. எவா் பதவிக்கு வந்தாலும் இந்த நாட்டு மக்களினை பாதுகாத்தல் வேண்டும் அவா்களுக்குரிய பாதுகாப்பு அவா்களுக்குரிய உரிமைகளை வழங்குதல் வேண்டும். சமுகங்களுக்கிடையே இனக் குரோதங்களை வழங்காமல் தேசிய ஒற்றுமைகளையே வழத்தல் வேண்டும். என அனுர குமார திசாநாயக்க அங்கு உரையாற்றினாா்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -