வாள் கத்தி வைத்திருப்போர் அவற்றை அருகில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தல்


ட்ட விரோத வாள் கத்தி உள்ளிட்டவற்றை வைத்திருப்போர் அவற்றை இன்றும் - நாளையும் அருகில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களை பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவிக்கையில், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரின் சீருடைக்கு சமமான உடைகளை வைத்திருப்பார்களாயின் அவற்றையும் அன்றைய தினமே பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சட்டத்திற்கு புறம்பான வகையிலான கத்தி போன்ற ஆயுதங்கள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவ்வாறான ஆயுதங்களும், சீருடைகள் பலவும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -