மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!


குருநாகல் மாவட்டத்தில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட கினியம மற்றும் வெல்லவ பகுதிகளுக்கு மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினர் விஜயம் செய்தனர். இதன்போது, இனவாத தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கினியம பிரதேசத்துக்கான நிவாரண பொருட்களை கினியம தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் எம்.எச்.சதகதுல்லாஹ்விடம் மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் எம்.கே.எம.மிக்ஷாட் வழங்கி வைத்தார்.

அத்துடன், வெல்லவ பகுதிக்கான ஒரு தொகை நிவாரணப் பொதிகள் வெல்லவ ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் அல்-ஹாஜ் பௌசானிடம் ஒப்படைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -