கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் .நஸீர்
எம்.என்.எம்.அப்ராஸ்-கல்முனைக்குடி சமுர்த்தி வலய பிரிவில் சமுர்த்தி பெறும் குடும்பங்களில்லிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான "சிசு சிரிய"புலமை பரிசில் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனைகுடி வலய அலுவலகத்தில் (22) இடம்பெற்றது. சமுர்த்தி முகாமையாளர் மோசஸ் புவராஜ் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
மாணவர்கள் எப்போதும் ஒழுகவிழுமியங்களை பேணி நடக்க வேண்டும். இதற்கு கல்வி ஓர் சிறந்த வழிகாட்டியாகவுள்ளது.ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் மனதில் ஒவ்வொரு நாளும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் நான் ஓர் நல்ல மாணவன்,ஒழுக்கமுள்ளவன் ,சிறந்த முன்மாதிரி மிக்க மாணவன் என்றும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் நல்ல மாணவர்களாய் திகழ வேண்டும் இதன் மூலம் தனது பெற்றோருக்கும் தனது நாட்டிற்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்க முடியும் .
பல துறைகளில் முன்னோக்கி பயணித்தவர்கள் எல்லாம் தனது ஆரம்ப கால கட்டங்களில் பல கஸ்டங்களை அனுபவித்து தான் உயர் பதவியை அடைந்தனர் .நீங்கள் நன்றாக கல்வியில் ஆர்வம் செலுத்துவதன் மூலம் பல துறைகளில் பிரகாசிக்க முடியும் .பெற்றோர் தமது பிள்ளைகள் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.நஜீம் ,திட்ட முகாமையாளர்ஏ.எம்.எஸ்.நயீமா,முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.றிபாயா,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத் ,உதவி முகாமையாளர் எம்.எம்.மன்சூர் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உடப்ட பொது மக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.