ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி அங்கு சிங்கள மொழியில் பின்வரும் விடயங்களை உரையாற்றினாா்.
முஸ்லீம் வீடுகளில் பாதுகாப்பு படையினா் தேடுதலின்போது - அரபு எழுத்துக்கள் , குர் ஆன் சீ.டி.கள், சிறுபிள்ளைகளது பாலா் பாடசாலையில் கற்கும் கசீதா சீடிக்கள் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேடுதலுக்கு வரும் பாதுகாப்புப் படையினருக்கு அரபு எழுத்துக்கும் - குர் ஆண் வசனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளது. அவர்களுக்கு அதனை விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது.
பெண்கள் சாதாரணமாக தலையை மூடி கடைகள், போக்குவரத்து வாகனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள், அரச அதிபா் காரியாலயங்கள் பாதைகளில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ள்து.
அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் கர்ப்பினி அவா் வாகான வசதில்யில்லாத இடத்தில் வாழ்ந்து வந்துள்ளாா். அவர் பிரசவ நோயினால் பாதிக்கப்பட்டு முச்சக்கர வண்டி பல வற்றுக்கு அழைத்தும் முஸ்லீம் என்றவுடன் அவா்கள் ஏற்ற வில்லை. அவா் ஒரு மாதிரியாக வேறு விதமாக வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டாா்.
குருநாகல் கம்பகா, புத்தளம் ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில திட்டமிட்டு பல கோடிக்கணக்கான முஸ்லிம்களது சொத்துக்கள் உடைமைகள் பள்ளிவாசல்கள் குர் ஆண் பாடசாலைகள் , பாதுகாப்புப் படையினா் ஊரடங்கு அமுலில் இருந்தும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு பற்றவைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
முஸ்லீம் ஆசிரியைகள் மாணவிகள் தலையை மூடி பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை -
தனியாா் கம்பணிகள், ஹோட்டல்கள், பெக்டறிகளில் நுாற்றுக் கணக்கான முஸ்லிம் வாலிபா்கள் யுவதிகள் தொழில்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். - முஸ்லிம் பெண்கள் ஆண்கள் அரச அலுவலங்களுக்குச் சென்று நமது அன்றாட அலுவல்களை நிவா்த்தி செய்ய முடியாமல் உள்ளது. .
நடைபாதை வியாபாிகள். வாரந்தச் சந்தைகளில் ஊர்களுக்குள் நடந்து சென்று சிறுவியாபாிகள் தமது வியாபராங்களை செய்ய முடியாத நிலை - முஸ்லீம் கடைகள் ஹோட்டல்களில் பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டாம். எனப் பிரச்சாரம்,
சிங்களவா்களது கட்டடிடங்கள் வீடுகளில் வாடகைக்கு இருந்தால் அக் கட்டிடத்தில் இருந்து எழும்பு மாறு வற்புறுத்தப்பட்டு வருகின்றது.
மினுவான் கொடை நகரில் கடைகள் எரிந்து அடுத்த நாளே மினுவான் கொடை நகர சபை இக் கடைகள் நகர சபைக்குச் சொந்தமானது இப் பிரதேசத்திற்குள் செல்வது தடை என விளம்பரப்பலகை நாட்டப்பட்டுள்ளது. .
முஸ்லீம்கள் சீ.டி ஒன்று வைத்திருந்தால் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரனை ஆனால் மினுவான் கொடையில் கடைகளை அழித்தவா்கள் 32 பேரும் 3 நாட்களில் பின்னா் விடுதலை.
வங்கிகளில் வீடுகளில் வியாபார நோக்கத்திற்கான பணங்கள் நகைகள் வைத்திருந்தால அதுபற்றி பல கேள்விகள் -
மொத்த்தில் அவசர காலச் சட்டத்தினால் முஸ்லீகள் தடுத்து வைத்து விசாரனைகள் போன்ற பிர்சசினைகளினால் முஸ்லீம் சமுகம் மிகவும் அச்சத்தில் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகின்றாா்கள்.