மத்ரஸா என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படும் இஸ்லாமிய மத பாடசாலைகளை ஒழுங்குறுத்துவதற்காக தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சு முஸ்லிம் மத மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அல்லது ஏனைய எந்தவொரு நிறுவனத்துக்கும் கொண்டுள்ள சட்ட அதிகாரம் தற்பொழுது இல்லை. தற்பொழுது இந்த மத்ரஸா நிறுவனம் நடத்தப்பட்டு வருவது தனியார் மட்டத்திலேயே ஆவதுடன் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இந்த நிறுவனத்தை ஒழுங்குறுத்துவதற்காக வேறான சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதுடன் இந்த திருத்தசட்டமூலம் தயாரிக்கப்பட்டது.
இந்தியா பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மத்ரஸா நிறுவன ஒழுங்குறுத்தலுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டத்தை போன்று இலங்கை பிரிவினால் கல்வி சட்டத்தையும் அவதானித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த திருத்த சட்டமூலம் மத்ரஸா நிறுவனத்தின் விடய சிபாரிசு தொடர்பில் பொதுவான ஒழுங்குறுத்தலையும் நடைமுறையையும் ஏற்படுத்துவதற்காக மத்ரஸா நிறுவன அமைப்பு ஒழுங்குறுத்தல் கண்காணிப்பு நிர்வாகம் பதிவுக்காக மத்ரஸா கல்வி சபை ஒன்று அமைச்சரவையின் கீழ் அமைப்பதற்கு தேவையான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் அலுவலக பிரதானி அமைச்சர் சாகல ரத்னாயக்கா அமைச்சர் கலாநிதி அர்சடி சில்வா இராஜாங்க அமைச்சர் ஈரான் விக்ரம ரட்ன மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் சுவாமி இலங்கை வகுப் சபையின் தலைவர் எஸ்.ஜ.எம்.யாசரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.