நம் அனைவர் மீதிலும் இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாகட்டும்...
அன்பான சகோதர சகோதரிகளே!
உலகில் சமாதானம் நிலைக்க வேண்டும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும், சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதே முஸ்லிம்களாகிய எங்களது நோர்க்கம் இதனைத்தான் நாங்கள் நேர் வழியாக பின்பற்றும் புனிதமாக அல் குர் ஆன் மற்றும் எங்களது நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவரான நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்துள்ளார்கள்.
விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபர்களின் மோசமான நடவடிக்கைகளை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளுவது,கேவளப்படுத்துவது, தொந்தரவு செய்வது எவ் வகையில் நியாயம்?
ஒரு பாடசாலையில் வகுப்பறையில் ஒரு குழந்தை தவறு செய்தால் எல்லாக் குழந்தைகளையும் தண்டிப்பது நியாயமாகாதே அவ்வாறுதான்.
இந்த உலக வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டது அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டும் இருக்கிறது ஆனால் முஸ்லிம்கள் யாரும் இவ்வாறு பிற சமூகத்தோடு நடந்துகொள்ளவில்லை..
1990 வருடம் பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகைக்காக கூடி இருந்த முஸ்லிம்கள் மீது விடுதலை புலிகள் (LTTE) கொடூரமான தாக்குதலை மேற்கொண்டார்கள் நூற்றுக்கு மேற்பட்ட (சிறுவர்கள் உட்பட) சகோதரர்கள் அவ் இடத்திலே மரணித்தார்கள்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற சோகம் போன்ற ஒரு நிலைக்கு நாம் முகம் கொடுத்தோம் ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இன சகோதரர்களையும் சந்தேக கண் கொண்டு பார்க்கவில்லை, அவர்களின் பொருளாதாரத்தில் கை வைக்கவில்லை, அவர்களின் அடிப்படை உரிமையை விமர்சிக்கவில்லை அவ்வாறு நாங்கள் நடந்துகொண்டும் இன்று எங்களோடு நீங்கள் நடந்துகொள்ளும் முறை மன வேதனை தருகிறது.
இந் நாட்டையும் இந்த நாட்டின் சட்டத்தையும் நாங்கள் மதிக்கிறோம் அதனால் அடையாளம் காண்பதற்கு இலகுக்காக அரசாங்கம் முகத் திரையை மாத்திரம் அணிய வேண்டாம் என்று சொன்னது நாங்களும் ஏற்றுக் கொண்டோம் ஆனால் நீங்கள் எங்கள் பெண்களின் அடிப்படை உரிமையில் கை வைக்க எத்தனிக்கிறீர்கள் எங்களை கிள்ளிப்பார்ப்பதில் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி?
அன்பான சகோதர சகோதரிகளே!
பொருளாதாரத்திலும் சரி வாழ்க்கை முறைகளிலும் சரி இந்த நாட்டில் எல்லா சமயத்தவரும் பின்னிப் பிணைந்து வாழ்கிறோம்.
இன்று நீங்கள் தமிழ் பிரதேசங்களுக்கு முஸ்லிம்கள் வியாபாரத்திற்கு வரக் கூடாது என்று விரட்டுகிறீர்கள் இந்த காரியத்தை செய்யும் நீங்கள் நிச்சயமாக ஒரு வியாபாரியாக இருக்க மாட்டீர்கள் அப்படி இருந்தால் அவர்களின் நிலை உங்களுக்கு புரிந்திருக்கும் நீங்கள் எடுத்த அதே முடிவை முஸ்லிம்களும் எடுத்தால் பாவம் அப்பாவி கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். நாங்கள் அந்த தவற்றை செய்யமாட்டோம்!
தமிழ் பிரதேசங்களில் பாடசாலைகளில், அலுவல்கங்களில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு ஆடைகள் விடயத்திலும்,அதிகார விடயத்திலும் நெருக்குதல் கொடுத்து இன்பம் காண முயல்கிறீர்கள்.
அதே போல முஸ்லிம் பகுதிகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகளுக்கு ஆடை விடயத்தில் நெருக்குதல் கொடுத்தால் நிலை என்ன? ஆனால் அந்த தவற்றை நாங்கள் செய்ய மாட்டோம்!
அன்பான சகோதர சகோதரிகளே!
அடுத்தவரின் மதத்தை மதிக்கிறோம்.. மனதை புரிந்துகொள்கிறோம்..
இதுவே சமாதானம் இதையே இஸ்லாம் போதிக்கிறது
முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். அதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.