தாண்டியடி சங்குமண்கண்டிப்பகுதியில் பாரிய குடிநீர்த்தட்டுப்பாடு!


மக்கள் அலைச்சல்:அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்!
ஆலையடிவேம்பு ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளர் ரகுபதி வேண்டுகோள்!
காரைதீவு நிருபர் சகா-
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தாண்டியடி சங்குமண்கண்டிக் கிராமங்களில் மக்கள் பாரிய குடிநீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
குழாய்நீர்விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலையடிவேம்பு அமைப்பாளரும் முன்னாள் உபதவிசாளருமான கே.ரகுபதி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
மேற்குறித்த பிரதேசங்கள் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேச எல்லையுள் வருகின்றன. திருக்கோவில் பிரதேசசபை ஓரளவு நடவடிக்கை எடுத்தாலும்கூட பொத்துவில் பிரதேசசபை அவர்களது பிரதேச மக்களுக்கு குடிநீரை வழங்க இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது கவலைக்குரியது.
குடிநீருக்காக அவர்கள் அலைந்துதிரிவதை நேரில் கண்டபோது வேதனையாகவிருந்தது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை இப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வுகாணவேண்டும்.

சாகாமக்களத்தில் நீர்வற்றினால் என்ன? அருகிலுள்ள வம்மியடிக்குளத்தில் தேவையான நீர் இருக்கிறது. அங்கிருந்து நீரைப்பெற்று அந்த மக்களுக்க வழங்கமுடியாதா?
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த ஏழைமக்களின் கண்ணீரைத்துடைக்க தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இதுதொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அக்கரைப்பற்றுப்பிராந்திய பொறியியலாளர் தா.வினாயகமூர்த்தியிடம் கேட்டபோது சாகாமக்குளத்தில் நீர்வற்றியிருப்பதே இப்பிரச்சினைக்கு அடிப்படைக்காரணமாகும். தண்ணீரின்மையால்தான் குழாய்நீர்விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது.என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -