கடந்த 21 ல் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத்தின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் மீது சக்தி டீவி எனும் ஊடகத்தை சிறப்பாக வழிநடத்தத் தவறியமையை இட்டும் ஊடக தருமம் மீறப்பட்டுள்ளதை இட்டு வன்மையாக கண்டிக்கிறோம் என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு இன்று (21) இடம் பெற்றுள்ளது சக்தி ஊடகத்துக்கு எதிராக கண்டனப் பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் .
சக்தி ஊடகத்து எதிராக கண்டணப் பிரேரனையை சக உறுப்பினர்கள் உட்பட தானும் ஏற்றுக் கொள்கிறோம் நாட்டின் அசாதாரண நிலைமையின் போது ஊடகங்கள் என்பது ஊடக தருமத்தை மீறாதவாறு அதனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்ட நினைப்பது எமக்கு மனவேதனையை தருகிறது ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதை தாக்கள் வரவேற்கிறோம் உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதை விரும்புகிறோம் இதை விடுத்து அசாதாரண நிலைமையின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வதந்திகளை பரப்புவதை தாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது இதனை வண்மையாக கண்டிக்கிறோம் .
மக்களுடைய அன்றாட நடவடிக்கைகள் நிலவரங்கள் இதனால் பெரும் அச்சத்தை உண்டு பண்ணுகிறது ஊடகங்களை சிறப்பாக செயற்பட்டால் நாட்டு நிலைமையினை உண்மைத் தன்மையினை அறிய முடியும் என மேலும் தெரிவித்தார்.