புவக்பிட்டி சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விசுகருணாநிதி அவர்களின் முகநூல் பார்வையும் சிலரது பின்னூட்டல்களும்...



புவக்பிட்டியில் நடந்தது என்ன?
நாட்டின் நாலாபுறமும் என்னென்னவெல்லாமோ நடந்துகொண்டிருக்கின்றது. புவக்பிட்டியில் மட்டும் அப்படி என்ன நடந்துவிட்டது என்று கேட்போரும் இருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சிறுபான்மையினர் நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்பதை நல்லிணக்கத்தை நாடும் யாரும் ஒத்துக்கொள்வார்கள். ஆனால், முகநூல் நட்புகளும் சில ஊடகவியலாளர்களும் இனமான உணர்வுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மையில், புவக்பிட்டியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப்புடன் வருகைதர தமிழ் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை என்றும் அதனால், அவர்களை உடனடியாக இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படும் தகவலைக்கொண்டு பலரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால், அங்கு நடந்த சம்பவம் வேண்டுமென்றே திரிபுபடுத்தப்பட்டதாகப் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பாடசாலைகளில் சோதனையிடும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி சம்பவ தினம் (மே 07) பெற்றோர்கள் அந்தப் 11 ஆசிரியைகளையும் சோதனையிட்டபோது அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாகவும், பின்னர் பெண் பொலிஸ் உத்தியோகத்தரைக்கொண்டு சோதனையிடுவதற்கும் அவர்கள் இணங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து முரண்பாடு ஏற்படவே கல்வித்திணைக்களம் வரை சென்றுள்ளனர். எனினும், அங்கும் பிரச்சினை தீர்க்கப்பட முடியாமல்போகவே, மாகாண ஆளுநரை நாடியுள்ளனர். அவர், அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்திருக்கிறார். அவ்வாறு ஒரே தடவையில் 11 ஆசிரியைகளை இடமாற்றம் செய்ய முடியுமா? என்று குறித்து பாடசாலையின் கல்விச் சமூகம் கேள்வி எழுப்பியிருக்கிறது! ஆகவே, இடமாற்றத்தைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே திட்டமிட்டுச் செயற்படுத்திய நாடகம் என்கிறார்கள் அவர்கள்!
இந்த ஆசிரியைகள் அனைவரும் ஓராண்டுக்கு முன்னர் நியமனம் பெற்று வந்தவர்கள். புதிய நியமனம் பெற்று பத்தாண்டு வரை இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியாது. எனவே, இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்பது அவர்களின் சந்தேகம்.
ஆனால், ஹிஜாப் அணிந்து வந்ததால், தமிழர்கள் முஸ்லிம் ஆசிரியைகளை அனுமதிக்கவில்லை என்று சொல்லப்பட்ட கதையை மட்டும் வைத்துக்கொண்டு சிலர் பரஸ்பரம் தாக்கியும் ஆதரித்தும் பதிவுகளை இட்டிருக்கிறார்கள். எந்த ஒரு விடயத்திற்கும் இரண்டு பக்க நியாயம் இருக்கின்றது என்பதை அறியாமலேயே ஒருவருக்கொருவர் பொதுவௌியில் உமிழ்ந்துகொள்கிறார்கள்!

இந்தச் சம்பவத்தின் பின்னர் குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை அறிந்து கருத்துகளைச் சொன்னால், வீணான முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும். சிறுபான்மைச் சமூகங்கள் சிந்தித்துச் செயற்படத் தவறினால், எதிர்காலம் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது!
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால், பெரிதும் பாதிக்கப்படுவது தமிழர்களும் முஸ்லிம்களும்தான். ஆகவே, எந்தத் தகவலையும் ஆற தீர ஆய்ந்தறியாமல் பொதுவௌியில் கருத்துகளைச் சொல்வதும் உணர்ச்சிவசப்படுவதும் சிறுபான்மையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்!


Madhu Mathy சந்தர்ப்பத்தை தங்களுக்கு சார்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார்கள்

Ashroff Shihabdeen பெற்றோர் எல்லா ஆசிரிய ஆசிரியைகளையும் சோதனை செய்தார்களா அல்லது முஸ்லிம் ஆசிரியைகளை மாத்திரம் சோதனை செய்ய முயன்றார்களா என்ற விளக்கம் உங்கள் பதிவில் தெளிவாக இல்லை விசு.

Mohan Chandran all have to give respect to the teachers tamil teachers or muslim teachers


Wisu Karrunanidhi உங்கள் சிந்தனையே தவறு சகோ...சோதனை என்பது எல்லோருக்கும் பொதுவானது. இப்படியான சிந்திப்புதான் பக்கச்சார்பை புலப்படுத்துகிறது. வேறு சில பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு நெருக்குவாரம் ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதுபற்றியெல்லாம் விரிவாக ஆராயவிருக்கின்றோம்...

Ashroff Shihabdeen பொதுவாக நடந்திருப்பின் அதை ஏற்றுக்கொள்ளலாம். இது பற்றிய வீடியோ ஒன்று உலாத்துகிறது. அதை நான் பார்க்வில்லை. பார்த்து விட்டுச் சொல்கிறேன்.

Mohamed Kaleel - adr Wisu Karrunanidhi அந்த கானொலியை பார்த்தால் என்ன நடந்திருக்குமென்று ஊகிக்கமுடிகிறது ...

Mohamed Ali Yaseer Arafath Who Authorize the parents to perform security checking is that a accepted norm in security protocol of the country? Well haven't you watch that Video that so called Parents intimidating teachers and blocking them from discharging their duties and verbally abusing a legally accepted cultural dresscode and forcing them to wear a dress thatthey dont want to wear.

Abdul Raheem Mohammdu Farveen Wisu Karrunanidhi sir இது பெற்றோரின் பக்கத்திலிருந்து வந்த கருத்து என்பதால் உங்களை நோக முடியாது. அந்த சம்பவம் தொடர்பிலான ஒரு காணொளி உலவிவருகிறது

1- அதனை நீங்கள் பார்த்தீர்களா?

2- அதில் ரவுடிகள் போல சில ஆண்கள் குறித்த ஆசிரியைகளை மிரட்டுவதை அவதானித்தீர்களா?
ஆம் எனில் - அந்த மிரட்டல் ஞாயமானதா?
இல்லை என்றால் தயவு செய்து அந்த காணொளியை நான்றாக பக்கச்சார்பின்றி பாருங்கள் - தேவையென்றால் அதனை உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

3- எல்லோரும் ஒரு ஆண்டிற்குள் நியமனம் பெற்றவர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட செய்தியா ?
ஆம் என்றால் 12 ஆசிரியைகளுமா?
இல்லை என்றால் புதிய நியமனம் பெற்றவர்கள் எத்தனை பேர்?

4- கல்வித்திணைக்களத்தின் அதிகாரிகள் பாடசாலை அதிபருடன் பேசியும் ஹபாயாவை கழற்றிவிட்டு சாரியில் தான் ஆசிரியைகள் வரவேண்டும் என்று அதிபரும், அங்கு நின்ற ரவுடிகள் போல தோற்றமளித்த கும்பலும் விடாப்பிடியாக நின்ற விடயம் உங்களுக்கு தெரியமா? ஆம் என்றால் அது சரியா? இல்லை என்றால்

5 -குறித்த ஆசிரியர்களில் ஒருவரிடமாவது இது தொடர்பில் கதைத்து விடயத்தை உறுதிப்படுத்தினீர்களா? ஆம் என்றால் அவர்கள் வழங்கிய தகவல் என்ன? இல்லை என்றால் இது ஊடக தர்மமா?

நாங்கள் மதிக்கின்ற ஒரு ஊடகவியலாளர் நீங்கள் இதற்கான பதிலை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறேன்.

Wisu Karrunanidhi மிக்க நன்றி! ஓர் ஊடகவியலாளனாக எந்தப் பக்கமும் சாராமல் என் பணியைச் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம்...இந்த விடயத்தை முழுமையாக ஆராயவிருக்கின்றோம். இலங்கை அரசியலமைப்பின்படி, யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், எந்த ஆடையையும் அணியலாம். அதனை தடுப்பது மனித உரிமை மீறல்! ஆனால், பாதுகாப்பு கருதி முகத்தை மூடும்படி எந்த வஸ்திரத்தையோ கவசத்தையோ அணிய முடியாது எனப் புதிய சட்டம் சொல்கிறது. இதுதான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம். என்றாலும் பிரச்சினையின் மூல காரணியைக் கண்டறியாமல் எழுந்தமானமாக எந்த முடிவுக்கும் வருவது உசிதமல்ல என்பதே எனது கருத்து!

Mkm Shakeeb நீங்கள் புதிதாக கதை புனைகிறீர்கள் தோழர்...இவ்வாறு தமிழ் ஆசிரியர்களுக்கு சில பகுதிகளில் நடந்ததாக ஊகத்தகவல் பரப்புகிறீர்கள்..அவர்களால் எந்த முகத்துடன் அங்கு கற்பிக்க முடியும்? முஸ்லிம் ஆசிரியர்களை அங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கையாக முஸ்லிம்களும் பொருள்கோடல் செய்ய முடியும்.. பொறுப்புடன் பதிவிடுவோம்..

Meera Jaufer சந்தேகமுள்ள ஒருவரை சோதனை செய்வது பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் மட்டுமே பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவது தான் உரிய ஆசிரியர்களின் கடமை மாறாத அதே பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரிரியைகள எவ்வாறு ஓர் ஆசிரியரோ அல்லது பெற்றாரோ சோதனை செய்ய முடியும் ???
முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை சம்மந்தமாக கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இருக்கும் போது வேண்டுமென்று ஏன் தொல்லை கொடுக்கவேண்டும்??

Sivalingam Sivakumaran கல்வி போதிக்கும் பணி செய்யும் அந்த சகோதரிகளிடம் அப்படி நடந்து கொண்டிருக்கவே கூடாது …இந்த சூழ்நிலையிலும் தைரியமாக அவர்கள் பாடசாலைக்கு வந்ததே அவர்களின் நேர்மையையும், கடமையையும் மனசுத்தியையுமே காட்டுகிறது…
எல்லோரும் இந்த சம்பவத்தை மட்டுமே பார்க்கின்றனர். அந்த சகோதரிகளுக்கு நடந்த அவலத்தை பார்த்துக்கொண்டிந்த மாணவர்களின் மனநிலையை எவராவது யோசித்தார்களா?
மாணவர்களின் மனதில் விடத்தை விதைத்த செயலாகி விட்டது இந்த சம்பவம்…இச்சந்தர்ப்பத்தில் எமக்குக் கல்வி போதித்த முஸ்லிம் ஆசிரியர்களின் உருவங்களும் அவர்களின் அரவணைப்பும் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை….

Waffa Farook மற்றவிடையங்களை ஆராய்வோம் என ஏற்றாலும் இடமாற்றத்துக்கான திட்டமிட்ட சதியாய் இருக்கலாம் என்ற ஊகத்தை சோதனையூடாக பிரச்சினையை தூண்டக்காரணமானோரை விசாரணைக்கு உட்படுத்தி அறியலாமே
அவர்களும் நீங்கள் கூறும் இடம்மாற்றிச் சதியில் சம்பந்தப்ட்டிருக்க வேண்டுமே
விசாரணையை தொடங்குங்கள்

Gnanamalar Maliboda Waffa Farook நீங்கள் தான் மனிதபேயத்துடன் பக்கச்சார்பற்ற நடுநிலை பதிவை இட்டிருக்கிறீர்கள்
பொதுவாக இன்றைய சூழ்நிலையில்ஜாஎல பிரதேசத்தில் ஒருபெற்றோரும் தம்பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை
ஆசிரியர் உட்பட மாணவர்கள் அனைவரையும் சோதனைக்குட்படுத்துவது தவறல்ல சில வேளைகளில்.அந்த சகோதரிஆசிரியர்களது பாதுகாப்புமான சோதனைதானே இது இதில் தவறு என்று கருதுவதற்கு ஒன்றுமில்லையே

Waffa Farook Gnanamalar Maliboda சோதனைக்கு சம்மதிக்காமல் விட்டார்களா என்பதை ஆராயவேண்டும்
அது உண்மையெனில் பாரபட்ஷமற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்
அதேபோல் அதாரமற்ற இடமாற்றச் சதிக்கதையையும்
விசாரிக்க வேண்டும்

Gnanamalar Maliboda Waffa Farook அது சரி நீதிக்கு புரம்பாக யார் செயல்ப்ட்டாலும் தகுந்த நவடிக்கைகளை மேற்கொளவதுதான் முறை

Maana Mackeen விசு, தங்கள் பதிவுகளை மதிக்கிறேன். நான் வளர்ந்துயர்ந்த தினகரனில் நீங்கள் மட்டுமல்ல, புவாக்பிட்டியவில் பல ஆண்டுகள் வாழும் மூத்த இதழாளர் /அருமை நண்பர் அருள் சத்தியநாதனும் உள்ளார். உங்களைவிட அவருக்கு இதில் பொறுப்பு அதிகம். இலங்கையிலிருந்தபடியே தமிழக அரசியலை அச்சொட்டாக நாடிப்பிடித்துப் பார்க்கும் அவர், தன் வீட்டு வாசலில் நடந்திருப்பதை எப்படி படம்பிடித்துக் காட்டுவார் என்பதைப் பார்க்க ஞாயிறு வரை காத்திருக்கிறேன். தயவுசெய்து அவருக்கு வழிவிட்டு ஓரம் போங்கள். (இது, நான் மதிக்கும் பொறுப்பாசிரியர் குணராசா கவனத்திற்கு) நன்றி.

Wisu Karrunanidhi யாரும் சொல்வதற்காக ஒதுங்கி ஔிவது ஊடகவியலாளனின் பண்பல்ல. அவரது பணியை அவர் செய்வார். நான் எனது பொறுப்பைச் செய்கிறேன். இதுவரை ஒரு ​கோணத்தில் மாத்திரம் பார்க்கப்பட்ட இந்த விடயம், இப்போதுதான் எதிரும் புதிருமாக விவாதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு தௌிவு கிடைக்கும் என நம்பலாம்.அருள் சத்தியநாதன் உண்மையைப் பிட்டு வைப்பார்தானே, அப்போது இதுபற்றி மேலும் தௌிவாகும் மானா மக்கீன் அவர்களே!

நன்றி  சிரேஷ்ட ஊடகவியலாளர் விசுகருணாநிதி அவர்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -