ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளர் பொறியியலாளர் சகோதரர் யாசிர் றஸ்மி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சகோதரர் அஸீம் ஹலீல் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு அண்மையில் சவூதி அரேபியாவில் அகால மரணமடைந்த மர்ஹும் முஹம்மது றிகாஸ் மற்றும் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காவும் இரு நிமிட மெளன அஞ்சலியுடன் நிகழ்வுடன் ஆரம்பமானது.
கட்டார் வாழ் ஷம்ஸியன்கள் சார்பில் சகோதரர் பர்சாத் சுக்கூர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினரும், கொழும்பு சங்கத்தின் துரித செயலணியின் உறுப்பினருமான சகோதரர் சுஹைல் ஜமால்தீன் அவர்கள் விசேட உரையை நிகழ்த்தியதோடு கட்டார் சங்கம் இயங்குவதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
பல்வேறு ஆலோசனைகளும் கலந்துரையாடல்களுக்கு பின்னர் அடுத்த கூட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் எனவும் அதுவரை கட்டார் சங்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர்களாக பர்ஸாத் சுக்கூர், அஸீம் ஹலீல், அப்றிடி ஸாஜஹான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டார் கிளையின் அனைத்து விதமான நடவடிக்கைகளும், பாடசாலையின் தாய் பழைய மாணவர் சங்கத்தினூடாகவே நடைபெற வேண்டும் எனவும் வருடாந்த பொதுக்கூட்டம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும் கொள்கையளவில் முடிவெடுக்கப்பட்டது.
குறுகியகால திறந்த அழைப்பாகவே இந்நிகழ்வு இருந்ததால், வருகைதராத மற்றைய மாணவர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுப்பதாக ஏகமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கட்டார் வாழ் சகல ஷம்ஸியன்களும் வருகை தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதோடு அக்கூட்டத்தில் ஏழு பேர் கொண்ட துரித செயலணியும் தெரிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வுக்கு வருகைதந்த பழைய மாணவர்களுக்கும், நாட்டிலிருந்து வருகைதந்த சுஹைல் ஜமால்தீன் அவர்களுக்கும் நன்றிகள்.
இறுதி நிகழ்வாக சகோதரர் வஸீம் சஜாத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
ஒருங்கிணைப்பாளர்கள்,
ஷம்ஸ் பழைய மாணவர் சங்கம்,
கட்டார் கிளை