உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு அற்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் - சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ்

றியாத் ஏ. மஜீத்-
த்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு அற்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் குடியரசு தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
குடியரசு தின நிகழ்வினை பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தேசியக்கொடி ஏற்றி தேசியக்கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

எமது நாடு 1948ம் ஆண்டு சுதந்திமடைந்தாலும் நமக்காக நமது நாட்டவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் இலங்கை குடியரசு நாடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது இன்றைய மே 22ம் திகதியாகும். இதன் மூலம் எமது நாட்டுக்கான சட்ட திட்டங்களை நாமே உருவாக்கியதுடன் எமது நாட்டின் இறைமையும் பாதுகாக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது பிரதேசம் இன்று நாட்டில் பிரபல்யமடைந்த பிரதேசமாக காணப்படுகின்றது. எமது காரியாலயத்திற்கு நாளாந்தம் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் வந்து செல்கின்றனர். எனவே உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை பொறுப்புணர்ச்சியுடன் செய்ய வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை அடுத்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பிரதேச செயலகத்தை நாடி வருகின்றனர் அவர்களுக்கான சேவைகளை குறித்த உத்தியோகத்தர்கள் தடையின்றி விரைவாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் காரியாலய நடைமுறைகளை பேணுதல் விடயங்களில் கவனமாக செயற்படுதல் வேண்டும். இதில் தவறிழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -