மக்கள் நிராகரித்தாலும் மக்களை நிராகரிக்காத மு.கா : செய்து காட்டிய அமைப்பாளர் எம்.எச்.நாசர்

ஹுதா உமர்-
சுகாதார, சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான கெளரவ பைசல் காசீம் அவர்களின் "கம்பெரலிய" திட்டத்தின் கீழ் மாளிகைக்காடு - கிழக்கு வட்டாரத்தில் மாளிகைக்காடு - மத்தி ஆலிம் 02ம் குறுக்கு வீதி மற்றும் ஆலிம் 03ம் குறுக்கு வீதிகளுக்கான கொங்கிறீட் செப்பனிடும் வேலை பூர்த்தியடைந்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
பல தசாப்த காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த இவ்வீதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு - கிழக்கு வட்டார அமைப்பாளர் பிரபல சமூக சேவகர் "விபுலநேசன்" எம்.எச்.நாஸர் அவர்களின் வேண்டு கோளுக்கினங்க புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

பல தேர்தல் கால வாக்குறுதிகளாக மட்டுமே இருந்து வந்த அந்த வீதிகளின் புனரமைப்பை செயலில் செய்து தந்த சுகாதார,சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ பைசல் காசீம் அவர்களுக்கும், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்குறுதியளித்தது போன்று தேர்தலில் மக்கள் ஆணை சரியாக இல்லாமல் போனாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று முகமாக குறித்த வீதியை முன்னின்று செப்பனிட்டு தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு - கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச்.நாஸர் அவர்களுக்கும் மக்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -