நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்முனை மாநகர பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (22) கல்முனையில் உள்ள தனியார் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த முதலிகே கலந்து கொண்டதுடன். பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது. மேலும் பொது மக்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை
அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் தெரிவித்ததுடன் இதற்க்கான தீர்வுகள் பெறப்பட்டது .
இச்சந்திப்பில் கல்முனை பிரதேச இராணுவ பொறுப்பாளர் தர்மசேன மற்றும் கல்முனைப் பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் உலமாக்கள் , வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.