புத்தளம் பிரதேசமானது புவியியல் ரீதியாக தென்னைப் பயிரச் செய்கை, மீன்பிடி, உப்பளம் போன்றவற்றை இயற்கை வளங்களாக கொண்டுள்ளது .இவற்றை கொண்டே அம்மக்களின் சீவனோபாயம் நிறை வேற்றப் படுகின்றது
யுத்தம் காரணமாக வடபுலத்து மக்கள் அகதிகலாக்கப்பட்ட போது அவர்களிற்கு உதவிக்கரம் கொடுத்து வரவேற்று வதிவிடம் வியாபாரம் கல்வி வைத்திய சேவை போற்றவற்றை வழங்கிய ஒரு தியாக பூமியாக நாம் புத்தளத்தை காண்கின்றோம்
'உப்பிட்டவரை உள்ளவும் நினை;' என்ற முது மொழிக்கு அர்த்தம் கொடுக்கின்ற போது அம்மக்கள் எமக்கு செய்த சேவைகள் ஒரு போதும் மறக்க முடியாதவை சில வருடங்களிற்கு முன் நாட்டில் ஏற்பட்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வாக அனல் மின்சார திட்டத்திற்கு இடமளித்தமையால் இன்றும் அம்மக்கள் கதிர்வீச்சுக்களினால் ஏற்படக்கூடிய பாரிய பாதிப்புகளிற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் அது மாத்திரமல்ல சீமெந்து தொழிற்சாலையிலிருந்து வெளியாகின்ற நச்சு வாயு தூசிகளினால் ஏற்படக்கூடிய சுவாச நோய்களுக்கும் ஆளாக்கப்படுகிற்றார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்
இயற்கையாகவே புத்தளத்தில் வாழ்கின்ற மக்களுக்கு பாரிய சவால் மிக்க பிரச்சினையாக குடி நீர் இருந்து வருவது நாம் அறிந்த விடயமே
தொடர்ச்சியாக பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு இன மத மொழி நிறங்களுக்கு அப்பால் அரசியல் தலைவர்களும் ஆன்மிக தலைவர்களும் ஒன்றிணைந்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன் வர வேண்டும்
கல்வி .வேலைவாய்ப்புகளுக்காக வேண்டி புலமைப் பரிசில்கள் பெற்று நம் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தொழிலாளர்கள் செல்கிறார்கள்
அப் பல்கலைக்கழகங்களில் ஆள் அறிமுக நிகழ்வுகளின் போது, பெயர் பூர்வீகம் நாடு போன்றவற்றை விபரிக்கும்போது புத்தளத்தை சேர்ந்த மாணவர்களிடம் குப்பைத் தொட்டி புத்தளமா என்று பகிடிவதை செய்வதையும் வேதனையுடன் காணக்கூடியதாக உள்ளது
அது மாத்திரமல்ல ஏன் எமது நாட்டுப் பல்கழகங்களிலும் அப்பகுதி மாணவரிடம் சிரேஷ்ட ஒரு மாணவரால் நகைப்புக்காக வேண்டி குப்பைத்தொட்டி யா உன் வாழ்விடம்? என்று கேட்கின்ற பொது பாதிக்கப்பட்ட மாணவரின் மனோ நிலை எவ்வாறு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் என்று சிந்திக்க வேண்டும்
குட்டக்குட்டக் குனிபவனும் மடையன் குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்பார்கள் இம்முறை நாங்கள் குனியவும் மாட்டோம் நீங்கள் குட்டவும் வேண்டாம் என்கின்றர்கள் புத்தள வாழ் மக்கள். சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வீதியோரங்களில் பாமர தொழிலாளிகள் இன மத மொழி பேதமின்றி உண்ணாவிரதம் இருந்து தம்மண்ணின் மகிமை காக்கவும் தம் எதிர்கால சந்ததிகளின் வாழ்வை ஒளிமயமாக்கி கொள்வதற்காகவும் அயராது பாடுபடுகிறார்கள்.
வீட்டுக்கொரு மலசல கூடத்தை அமைப்பது போன்று பிரதேசத்திற் கென்று குப்பை தொட்டி அமைத்து அதனை மீள் சுழற்சிமுறைக்கு பயன்படுத்தி -நற்பயனை அடைவோமாக
பெற்ற தாயை நேசிப்பது போல் தாம் பிறந்த மண்ணையும் நேசிப்போமாக போராடி வெல்வோர்களாக புத்தளத்து மண்ணின் செழுமையுடன் தமது பிரஜைகளை வளர்த்து வாழ்வதற்குதவுவோமாக
எந்தப் பெற்றோரால் தான் அதனை சகிக்க முடியும் ஆகவே இன்று புத்தள வாழ் மக்களின் மன உளைச்சல் தம் சந்ததிகளின் எதிர்காலம் பற்றி தான்.
தொழில்பிரச்சினை தீராத நோய் ஆட்கொல்லி நோய், திருமண முறிவு தகப்பன் இறப்பு, தாய் இறப்பு பரிட்சையில் தோல்வி இவைகள் தான் மன உளைச்சலுக்கு காரணமாக முடியும் ஒவ்வொரு பெற்றோர்களினதும் ஆதங்கம் தம் பிள்ளைகள் பற்றிய கனவுகள் இவை. எம் புத்தள வாழ் பிரதேச மக்கள் அனைவரையும் இன்று பீடித்துள்ள ஒரு மன நோயாகும் ஆகவோ மன அழுத்தம் யாருக்கு எம் புத்தள வாழ் பிரதேச மக்களிற்கு. இவ்வாறு இயற்கை செயற்கை பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வேளையிலும் கூட தமது உதவி கரத்தையும் அவர்கள் மற்றவர்களுக்கு நீட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்
இது இவ்வாறு இருக்க இன்றைய சில மாதங்களாக அவர்கள் மீளாத்துயரில் குழந்தை முதல் முதியோர் வரை பல்லின சமுகத்தவரும் வீதியோரங்களில் உரிமை கோருவது தம் சொந்த மண்ணில் தான் பிறந்த பூமியில் உலகக் குப்பைக்கு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உருவாகின்ற குப்பைக்கும் குப்பைத்தொட்டியாக தமது பூமியான அருவக்காட்டுப் பகுதியை தர முடியாது
அவ்வாறு நாங்கள் சம்மதித்தால் அதனால் நீண்ட காலத்துக்குப் பிறகு அப்பிரதேச மக்களிற்கு பல்வோறு வகையிலும் குழந்தைச் செல்வங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அது ஒரு சவாலாக முடியுமென்றே கோஷமிட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வீதிகளில் தவம் கிடக்கின்றார்கள் இதிலிருந்து அவர்கள் மீட்சி பெற எல்லோரும் இணைந்து பாடுபடுவோம்
பல் வைத்தியர்
அத்ஹரா சாதிக்
குடும்ப நல ஆலோசகர் (உயர் தேசிய டிப்ளோமா)
பல் வைத்தியர்
அத்ஹரா சாதிக்
குடும்ப நல ஆலோசகர் (உயர் தேசிய டிப்ளோமா)