நாட்டில் ஏற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு காரணங்களினால் கடந்த வாரம் பதியத்தலாவ றஹ்மானியா ஜும் ஆ பள்ளிவாயலில் கடமை புரியும் மெளலவி இக்பால் முஹம்மது லரீப் பதியத்தலாவ யிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார்.
இவருடைய கையடக்கத் தொலைபேசியில் தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரான் ஆற்றிய உரை அடங்கிய வீடியோ இருந்ததை அடுத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று (8) வரை தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்ததுடன் இன்று(8) தெஹியத்தக்கண்டிய நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் இவர் குற்றமற்றவர் இவருக்கும் 21 ஆம் திகதி நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அம் மெளலவி விடுதலை செய்யப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தன.